ஶ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு எதிராக ஸ்தலத்தார்கள் – தொடர் – 5

0 553

ஶ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு எதிராக ஸ்தலத்தார்கள் – தொடர் – 5

 

ஸ்ரீரங்கம் ஸ்தலத்தார்களின் அநியாயங்களையும், அக்கிர மங்களையும் உண்மைக்கு புறம்பான  செயல்பாடுகளையும் கிழித்து தொங்கவிட்டவுடன் கதறும் ஸ்தலத்தார்   பெயர் தெரியாத பத்திரிக்கையில் ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்களாகிய  எங்களை தரம் தாழ்ந்த வார்த்தைளில் எழுதியுள்ளதாக பத்ரிபட்டர் பேசியுள்ளார்.

 

இது குறித்த உண்மை நிலையை அறிய ஸ்ரீரங்கத்தில்  வாழ்கின்ற அடியார் பெருமக்கள், பொதுமக்கள்,  ஸ்ரீவைணவ பெரியோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரங்களை தெரிவிக்க கடமை பட்டிருக்கின்றோம். அவர்கள் கூறியதாவது.

 

ஸ்தலத்தார்கள் என்றைக்காவது அரங்கனின் கைங்கர்யங்களை பற்றியோ, திருக்கோயில் நலன் மற்றும் மேம்பாடுகள் பற்றி பேசியது உண்டா? அவங்களால் அல்லது அவங்கள் மூலமாக எதாவது உபயமாகவோ வேறு வகையில் ஏதாவது கைங்கர்யம் நடந்ததுண்டா? .   கோயிலில் முறையாக நடை பெறும் பூஜைகளை உண்மைக்கு புறம்பாக திரித்து  பல வருடங்களாக  பொய்புகார் அளித்து நிர்வாகத்தை மிரட்டி பார்த்தார்கள்.

 

இந்த மிரட்டல்கள் எதற்கு என்றால் கோயில் நிர்வாகம் தாங்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும் எனவும், அப்படி கேட்கும் பட்சத்தில் ஸ்தலத்தார்கள் . இதை வைத்து கொண்டு  ஊரை ஏமாற்றி கைங்கரியம் செய்வதாக சொல்லி வசூல் செய்ய முடியும். மேலும் டிரஸ்ட் ஏற்படுத்தி  அரங்கனின் வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் உள்நாட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை ஏமாற்றி பணம் வசூலிக்கும் செயல் செய்ய முடியும்.

இது குறித்து ஸ்ரீவைணவ பெரியவர் திரு.ஸப்தா சம்பத் என்பவரிடம் பேசினோம். அவர் இவனுங்க கோயில் மரியாதைக்காக எந்த காரியமும் செய்வார்கள், இதற்காக யாரையும் தகுதி தரம் பார்க்காமல் விமர்ப்பார்கள் எனவும்  மற்றும்  இதற்காக எந்த செயலையும் செய்யக்கூடியவர்கள் என்றார்.

 

அவர் இவர்களின் வண்டவாளங்களை  தண்டவாளங்களில் ஏற்றுவார். இவரை கண்டால் பயந்தது ஓடுவார்களாம். இவர் மாதிரி நபர்  இல்லையெனில் இல்லாத மரியாதைகளை நிறைய  பெற்றிருப்பார்கள் எனவும், இதற்கு முன்பு  அப்பாவியான,  சாதுவான இதர கைங்கர்யபாரர்களின் மரியாதைகளை பறித்து தனக்கான மரியாதையாக ஆக்கி கொண்டவர்கள்.  இது போன்ற மோசமான செயல்களை இதற்கு முன்பு செய்திருக்கின்றார்கள் என்றார்.

( இவரின் பேட்டி, ஆவணங்களுடன்  தனியாக வெளியிடப்படும்.  )

மேலும் பத்ரிபட்டரின் காணொளி பதிவிற்கான உண்மை நிலவரத்தினை அறிந்தும்  கருத்து கேட்டும்  வெளியிட்டுள்ளோம்.

அதில் முதலில் ஸ்ரீநம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவைடை உற்சவங்கள் அதற்கான அனுமதி பெற்று நடைபெற உள்ளதை அறிந்து ஏதோ இவர்களால் நடைபெற்றது போல் பேசி இருக்கின்றார் என்பதும், மேலும் ஸ்ரீநம்பெருமாள் ஜேஷ்டாபிஷேக நிகழ்வின் வீடியோ பதிவில் ஸ்தலத்தார்கள் பதிவு இல்லாமல் பார்த்து கொண்டார்களாம் என்பது குறித்து விசாரித்தோம்.

அப்போது பலர் தெரிவித்த கருத்து என்னவென்றால், இவர்களுக்கு வேலை ஒன்றும் இல்லையே. வேலை இல்லாத இடத்தில் இவர்களுக்கு என்ன வேலை. மரியாதையை  வாங்க மட்டும் வந்தால் எப்படி பதிவு  இருக்கும்? என்றனர்.

மேலும் இவர்களுக்கு  ஸ்ரீநம்பெருமாளின் சுய திருமேனி அஸ்தம், பச்சை கற்பூரம் தரவில்லையாம். இப்படி வேலை செய்யாமல்  கேட்க நாக்கு கூச வேண்டாமா? அதற்கு இவர்களிடம் பெருமாளுக்கே நாங்க சாற்றவில்லை  உங்களுக்கு எப்படி தருவது என சொன்னார்களாம். யார் சொன்னது என்ற உண்மையை வெளியிட தயாரா?. பொய் பேசுவதே பிழைப்பா பேச்சு இவர்களுக்கு. நாங்க விசாரித்த உண்மை நிலவரம் தான் நாங்கள் சொல்வது.

ஸ்ரீதாயாரின் ஜேஷ்டாபிஷேக நிகழ்வில் போட்டோ எடுத்து கொண்டே இருந்தார்கள் எனவும், மேல் அதிகாரிகள் ஏன் ஸ்தலத்தார்கள் இல்லையா என கேட்டார்களாம். அதனால் அவர்கள் குட்டுக்கு பயந்து எடுத்தார்கள் என கேட்டுள்ளார். எந்தவிதமான கைங்கர்யம் செய்யாமல் இந்த கொரோனா காலத்திலும் திருக்கோயில் மரியாதை பெறுவதை உலகம் அறிந்த கொள்ள வேண்டாமா,  உங்களின் சுயரூபம் தெரிய வேண்டாமா?  அதற்காக கூட இருக்குமோ?  என்னவோ? என்றனர்.

இவர்கள் இந்த நிகழ்வில்  காவிரியில் இருந்து தீர்த்தகுடம் எடுத்தார்களா அல்லது இதற்கு உதவிதான் செய்தார்களா?சுமார் 500 க்கும் மேற்பட்ட மண்பானைகளில் இரவு முழுவதும் நடைபெற்ற சுத்தஅன்னம் (1000 கிலோ) சமைக்கும் நிகழ்வில் பங்கேற்றனரா? அல்லது உதவினார்களா? இல்லை ஏதாவது ஓரு வேலையாவது செய்தார்களா? எந்த வேலையும் செய்யாமல் பெற்று கொள்வதற்கு  பெயர் தான் என்ன ? தங்கள் மேல் அழுக்கு படிந்துள்ள இவர்கள் தான் ஒளிந்திருக்கும் பல ரகசியங்களை வெளியிட காத்திருக்கின்றோம் என கூறுகிறார்கள்.

கூற வேண்டியது தானா?.  நீங்கள் இதுவரை வந்த பதிவிற்கு பதில் சொல்ல வேண்டும் என பல அரங்கனின் பக்தர்கள் கேட்டனர்.

1.ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்திற்கு உட்பட்ட அனைத்து திருக்கோயில்களிலும் விஷ்வக்ஸேனருக்கு ஸ்ரீசடாரி மரியாதை அளிக்கப்பட்ட பிறகே மற்றவர்களுக்கு அளிப்பது வழக்கம்.  விஷ்வக்ஸேன ஆராதனம் செய்த பிறகே  எந்தக் காரியத்தையும் தொடங்குவதையும், பிரம்மோற்சவத் தொடக்கத்திற்கு முதல் நாள் அவர் திருவீதிகளில் வலம் வருவதும், ஆசார்ய ஸ்தானத்தில் பெரிய பெருமாள், பெரிய பிராட்டியருக்குப் பிறகு அவரை நாம் கொள்வதும், அவர் நம்மாழ்வாருக்கு திருவிலச்சினைகள் அணிவித்தார் என்று குருபரம்பரை நூல்களில் கூறப்பட்டுள்ளதாலும் ஸ்ரீவிஷ்வக்ஸேனருடைய  உயர்ந்த ஸ்தானம் நிலை நாட்டப்பட்டுள்ளது.

ஆனால் திருவரங்கம் திருக்கோயிலில் ஸ்தலத்தார்கள் ஸ்ரீவிஷ்வக்ஸேனருக்கு முன்னதாக ஸ்ரீசடாரி மரியாதையை பெறுவத குறித்து

கருத்து கூறவில்லையே ஏன்? பதில் சொல்லவும்.

2.திருவரங்கம் திருக்கோயிலில் பூஜாபரிஜாரர்களாக இருந்து கொண்டு உபசன்னதிகளை  கவனித்துக்கொண்டு வரும் ஸ்தலத்தார்கள் சன்னதிகளில் முறையாக காலபூஜைகள் மற்றும் நெய்வேத்தியங்கள் செய்யப்படுவதில்லை, மேலும் ஒவ்வொரு உபசன்னதியிலும் தனித்தனியாக சுவாமிக்கு நெய்வேத்தியங்கள் செய்வதற்காக மடப்பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், நெய்வேத்தியங்கள் மடப்பள்ளியில் தயார் செய்யாமல், ஸ்தலத்தார்கள் தங்கள் வீட்டில் இருந்தே நெய்வேத்தியங்கள் கொண்டுவந்து சுவாமிக்கு படைக்கின்றீர்களே.  இவ்வாறு வெளியில் இருந்து நெய்வேத்தியங்கள் கொண்டுவந்து சுவாமிக்கு படைப்பது  ஆகமத்திற்கும், திருக்கோயில் பழக்க வழக்கங்களுக்கும் முற்றிலும் விரோதமானது என தெரிந்தும் ஸ்ரீகூரத்தாழ்வான் சன்னிதி மற்றும் ஸ்ரீதொண்டரடிபொடியாழ்வார் சன்னிதி யில் நடைபெறுவது குறித்து  பதில் சொல்லாமல்  மெளனியாக இருப்பது ஏன்?

3. திருவரங்கம் திருக்கோயிலில் உள்ள உபசன்னதிகளை ஸ்தலத்தார்களோ, பூஜாபரிஜாரர்களோ பூஜைப்பணிகளை மேற்கொள்ள திருக்கோயில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  தொண்டரடிப்பொடியாழ்வார் சன்னதியில் பூஜாபரிஜாரகரான ஸ்தலத்தாரின் வீட்டுப்பெண் திருக்கோயில் உபசன்னதியை திறப்பது, பூட்டுவது மற்றும் உள்துறை பணியில் ஈடுபடுவது சரிதானா? இது குறித்து பதில் சொல்லவில்லையே ஏன்?.

4. இத்திருக்கோயிலில் கால பூஜைகள், கைங்கர்யங்கள் ஆகியவை ஸ்ரீஉடையவர் (இராமானுஜர்) – ஆல் முறைபடுத்தப்பட்ட நிர்வாக நெறிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது என்று கூறும் ஸ்தலத்தார்கள் ஸ்ரீஉடையவரின் குருவான பெரியநம்பி மற்றும் அன்னாரது பரம்பரை வாரிசுகளுக்கு முதலில் மரியாதை வழங்காமலும், ஸ்தலத்தார்களுக்குரிய மரியாதை கிடைக்கவிடாமலும் செய்து பெரிய நம்பி பரம்பரையினரை தீர்த்தக்காரர்களாக மட்டுமே நடத்துவது ஏன்?  இது குறித்து பதில் செல்லாததன் காரணம் என்ன?

5.திருவரங்கம் பெரியபெருமாளின் சொத்துக்களை முறையற்ற வகையில் ஸ்தலத்தார்கள் அறங்காவலர்களாக இருந்த போது பல்வேறு முறைகேடுகள் செய்தது மற்றும் பெரியகோயிலுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்கள்  முறையான அனுமதியின்றி தங்கள் இஷ்டப்படி தங்களுக்கு வேண்டியவர்களுக்காகவும், பணத்தாசை காரணமாகவும் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து பல்வேறு  நிலமோசடியில் ஈடுபட்ட ஸ்தலத்தார்கள் குறித்து  பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?

திருக்கோயிலுக்கு சம்மந்தமில்லாத நபரின் துணை கொண்டு ஸ்ரீவைஷ்ணவத்திற்கு எதிராகவும், திருக்கோயிலின் ஆகமத்திற்கும், திருவரங்கம் பெரியகோயிலுக்கும், திருக்கோயிலின் நலனுக்கும் எதிராக செயல்பட்டுவரும் ஸ்தலத்தார்களே, பெயரே தெரியாத, அரக்கர் கூட்டம் நடத்தும் [உங்களை போன்ற உயர்ந்தவன் என்ற ஆணவம்பிடித்தவர்களுக்கு எங்களை போன்ற சாமானிய  இந்து பக்தர்கள் அரக்கர் கூட்டம் தான்]  பத்திரிக்கை பதிவிற்கு பதில் சொல்ல வேண்டாம். அரங்கனின் அடியார்களுக்கு பதில் சொல்ல வேண்டாமா? உங்கள் பதில் காணொளியில் வருமா?.

அடுத்த அடுத்த பதிவில் பாலகரை மச்சான் என அன்போடு அழைக்கப்படுபவரும் போர்வை,தலையணை வாடகைக்கு விற்று உயர்ந்த நிலையை அடைந்த ஸ்தலத்தாரின்  செயற்கரிய செயல்கள் வரும்

இவண்.

உண்மை நிலையை அறிந்தும், தெரிந்து வெளியிட்ட அரங்கனின் அடியார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!