ஸ்ரீராமானுஜர் சீர்படுத்திய திருவரங்கம் திருக்கோயில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் ஸ்தலத்தார்கள் – தொடர் – 4

ஸ்தலத்தார் – தொடர் - 4

0 1,080

ஸ்ரீராமானுஜர் சீர்படுத்திய திருவரங்கம் திருக்கோயில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் ஸ்தலத்தார்கள் – தொடர் – 4

 

திருவரங்கம் பெரிய கோயிலில் ஸ்தலத்தார்களின் சாஸ்திர, ஸம்பிரதாயத்திற்கு விரோதமான செயல்பாடுகள் – 4        

 

பூலோக வைகுந்தம் எனவும் பெரியகோயில் எனவும் போற்றப்படும், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் பன்னிரு ஆழ்வார்களாலும் மங்களாசாஸனம் செய்யப் பெற்ற பெருமையுடையது.

 

திருவரங்கம் பெரியகோயிலில் ஸ்தலத்தார்கள் கோயில் பணிகளான, சுவாமி தூக்குபவர் (ஸ்ரீபாதம்), தீர்த்தக்குடம் தூக்குபவர் (திருமஞ்சன ஊழியம்) மடப்பள்ளி சமையல்காரர் (நாச்சியார் பரிகலம்), மடப்பள்ளி பானைகளை கழுவி சுத்தம் செய்தல் பணி, தீவட்டி பிடிப்பது (திருப்பதியார் ஊழியம்), தங்ககுடை பிடிப்பது, சாமரம் போடுவது, விளக்கு போடுவது, பால் ஊழியம் இப்படி கோயிலின் உள்துறை தொடர்பான இந்த கைங்கரியங்களில் ஈடுபட்ட இவர்கள்  தற்போது எந்தவித பணிகளையும்  சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக செய்யவில்லை.  இவர்கள் செய்யாத பணிகளை திருக்கோயில் நிர்வாகம் பணிநியமனம் செய்து திருக்கோயில் பணியாளர்கள் மூலமாக செய்து வருகின்றனர்.

 

பெரியகோயிலில் இந்த ஸ்தலத்தார்கள் மேலே கண்ட எந்த பணிகளையும்  கடந்த 75ஆண்டுகளுக்கு மேல் செய்யாமல் அதற்கான சன்மானம், மரியாதை மற்றும் பிரசாதங்களை  இந்த ஸ்தலத்தார்கள் தற்போது வரை பெற்று வருகின்றனர். [ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தில் எந்தவித பணியும் செய்யாமல், மரியாதை, சன்மானம் மற்றும் எவ்வளவு பிரசாதங்கள், ஆண்டு முழுவதும் பெற்று வருகின்றார்கள் என்ற விபரம் அடுத்த பதிவில் ] இப்படி கோயிலில் வேலை செய்து வந்த இவர்கள் தாங்கள் சொல்கிறபடி தான் நிர்வாகம் நடைபெற வேண்டும் எனவும், தங்களால் தான் இதற்குமுன் நிர்வாகம் நடைபெற்றது எனவும் கூறிவருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பேஷ்கார் மூலம் தான் நிர்வாகம் நடைபெற்றது.  அப்போது  Temple Committee  ஏற்படுத்தப்பட்டு அந்த கமிட்டியில் ஸ்தலத்தார்கள் அறங்காவலர்களாக இருந்தனர்.  இவர்கள் மட்டும்  அறங்காவலராக இருப்பது சரியல்ல என்பதால், ஸ்ரீவைஷ்ணவத்தை சேர்ந்த சாஸ்திர, ஸம்பிரதாயங்களை அறிந்தவர்கள் சிலரை அறங்காவலர்களாக ஆங்கிலேய அரசு நியமனம் செய்தது.  ஆங்கிலேய அரசின் உத்தரவினை உடனடியாக ஆட்சேபணை செய்து ஸ்தலத்தார்கள், மாவட்ட நீதிமன்றத்தில் O.S.No.  7/1882 அசல் வழக்கு தாக்கல் செய்தனர். மேற்படி அசல் வழக்கு மாவட்ட நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு  ஸ்தலத்தார்களுக்கு எதிராக உத்தரவிடப்பட்டது.

 

மேற்படி ஸ்தலத்தார்களுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்தலத்தார்கள் சார்பாக Appeal No.89/1883 தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு ஸ்தலத்தார்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

Temple Committee-ல் ஸ்தலத்தார்கள் அறங்காவலர்களாக இருந்த போது பல்வேறு முறைகேடுகள் செய்த காரணத்தினாலும், பெரியகோயிலுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்கள் ஸ்தலத்தார்களால் முறையான அனுமதியின்றி தங்கள் இஷ்டப்படி தங்களுக்கு வேண்டியவர்களுக்காகவும், பணத்தாசை காரணமாகவும் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

 

முறைகேடாக விற்பனை செய்த நிலங்கள் பற்றிய விபரம், ஆதாரங்களுடன் வரும் பதிவில் இடம் பெறும்.]இதனை எல்லாம் அறிந்த உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்களும், பொதுமக்களும் திருக்கோயிலில் நிர்வாகத்திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று பக்தர்கள் சார்பாக, திருக்கோயில் ஸ்தலத்தார்களை தரப்பினராக சேர்த்து, திருச்சிராப்பள்ளி சார்பு நீதிமன்றத்தில் O.S.No. 25/1912 அசல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

மேற்படி அசல் வழக்கின் முடிவில் ஸ்தலத்தார்கள் திருவரங்கம் திருக்கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்தது நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யப்பட்டது.  எனவே, திருவரங்கம் பெரியகோயிலுக்கு ஸ்தலத்தார்கள் தவிர்த்த அறங்காவலர்களால் நிர்வாகம் செய்ய ஏதுவாக  நிர்வாகத்திட்டம் அவசியமென்று நீதிமன்றம் கருதியதால், இத்திருக்கோயிலுக்கு நிர்வாகத்திட்டத்தினை நீதிமன்றமே ஏற்பாடு செய்தது.

 

திருவரங்கம் பெரியகோயிலுக்கு நிர்வாகத்திட்டம் அவசியம் என கருதி சார்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டு Appeal No. 328/1913 மற்றும் 355/1913 தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவான, திருவரங்கம் திருக்கோயிலுக்கு ஏற்படுத்தப்பட்ட நிர்வாகத்திட்டம் உறுதி செய்து உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. (Reported in L.W.111 Page at 43)

 

ஸ்தலத்தார்கள் மீது குற்றம் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டு  நிர்வாகத்திட்டம் (Scheme)  Boards order No. 675 நாள்.02.03.1942-ன்படி ஏற்படுத்தப்பட்டது.  அந்த நிர்வாகத்திட்டத்தின் அடிப்படையில் (Scheme)  1.தென்கலையார், 2.வடகலையார்,  3.மாத்வர், 4.சைவர்,  5.ஸ்தலத்தார் ஆகிய 5 நபர்கள் அறங்காவலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.  இதில் 5 நபர்களில் ஒருவராக ஸ்தலத்தார்களில் குறிப்பிட்ட சில குடும்பத்தார் ஒவ்வொரு தமிழ்வருடமும் சுழல்முறையில் இருந்து வருகின்றனர்.

 

அறங்காவலர்குழுவில் தேர்ந்தேடுக்கப்படும் மற்றவர்களுக்கு திருக்கோயிலின் பழக்க வழக்கங்களைப் பொறுத்து போதிய அனுபவமில்லாத காரணத்தினால், திருக்கோயிலின் பழக்கவழக்கங்களை தெரிவிப்பதற்காக ஸ்தலத்தார்களில் ஒருவர் அறங்காவலராக நியமிக்கப்படுகிறார். இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல், தாங்கள் தான் பெரியகோயிலின் நிர்வாகமே என்பது போல அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட்டு தடை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்திற்கு விரோதமாக வெளிநாட்டிற்கு சென்று அங்கு பல வருடங்கள் தங்கி, மேலைநாட்டு வாழ்க்கை வாழ்ந்து மாற்றுமதத்தவரை மணம் புரிந்து, பாணத்தை குடித்துவிட்டு சமூகவலைதளங்களில் உளறி கொட்டும், ஸ்ரீவைஷ்ணவ விரோதியும் ஸ்ரீரங்கம் திருக்கோயில்கள் பற்றி உண்மைக்கு மாறாகவும், தவறான தகவல்களை பரப்பும், கபட வேடதாரியுடன் கூட்டு சேர்ந்து ஸ்தலத்தார்கள் செய்யும் அக்கிரமங்கள் சொல்லிமாளாது.

 

ஆக திருவரங்கம் பெரியபெருமாளின் சொத்துக்களை முறையற்ற வகையில் விற்பனை செய்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட ஸ்தலத்தார்கள், ஆகம விதிகளுக்கும், ஸம்பிரதாயங்களுக்கு விரோதமாகவும், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு திருக்கோயிலுக்கும், திருக்கோயில் நிர்வாகத்திற்கும் அவப்பெயரினை ஏற்படுத்திவிட்டு, ஏதோ தாங்களே உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்கள் என்பது போலவும், திருக்கோயிலினை ஸ்தலத்தார்களே காத்துவருவது போலவும் ஒரு மாயத்தோற்றத்தினை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் செய்த அநியாயங்களை இதுநாள்வரை பொறுத்தது போதும், இனியும் பொறுத்தால் அரங்கனே நம்மை மன்னிக்கமாட்டார். இத்தகைய ஸ்தலத்தார்கள் மீது திருக்கோயில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கையினை எடுக்கும்வரை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இவண் : திருவரங்கம் வாழ் அரங்கனின் பக்தர்கள்.. 

பதிவு வலம் வருகிறது… இந்த பதிவுகளை வைத்து அடிப்படை தகவல்களாக வைத்துக்கொண்டு  இது குறித்து நாமும் விசாரித்து முழுமையான தகவல்களுடன்  அடுத்தடுத்து வெளியிடுகிறோம்…

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!