கல்யாணம் ஆசை காட்டி கற்பழித்து ஏமாற்றிய வரை வலைவீசி தேடும் போலிஸ் !

0 964

கல்யாணம் ஆசை காட்டி கற்பழித்து ஏமாற்றிய வரை வலைவீசி தேடும் போலிஸ் !

 

ஈரோடு மாவட்டம், சித்தோடு, ஊத்துக்காடு, பகுதியை சேர்ந்தவர்  பெயர் மாற்றப் பட்டுள்ளது செல்வி (31), இவர் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கன்சல்டன்டாக வேலை பார்த்து வந்தார்இவரை கோவை மாவட்டம்  துடியலுர் தொப்பம்பட்டி, குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மகன் சிபிராஜ் பெண் பார்க்க வந்தார்.

 அப்போது பிடித்து போய் விட்டதால் இருவரும் தொலைபேசியில் தொடர்ந்து பேசி பழகி வந்தார். திடீரென ஒரு நாள் மிகவும் பிடித்து விட்டதாக கூறி சிபிராஜ் கோவைக்கு தனியாக வர சொன்னார்

அப்போது செல்வி அவருடைய தோழியுடன் சென்று சந்தித்தார். வீட்டு தனியாக வருமாறு சிபிராஜ் கூறி போது தன்னால் தனியாக வர முடியாது நான் அவசரமாக டெல்லிக்கு செல்ல வேண்டும் என்றேன். அப்போது பேசிய அவர் நீ எனது கும்பத்தாரிடம் பேச வேண்டும் எனது வீட்டுக்கு வந்து விட்டு பின்னர் டெல்லி செல்லாம் என்றார். இதனை நம்பி அவர் வீட்டு தனியாக சென்று பார்த்த போது வீட்டில் யாரும் இல்லையே என்று கேட்டபோது எல்லோரும் சிறிது நேரத்தில் வீட்டு வந்து விடுவார்கள் என்றார்.

 

அப்போது அவர் கொடுத்த ஜீஸை வாங்கி சாப்பிட்ட போது மயங்கி விட்டார் பின்னர் கண் விழித்து பார்த்த போது கற்பழிக்கப்பட்டு படுகை அறையில் கிடத்தார். பின்னர் இது குறித்து நான் கேட்ட போது நாம் இருவரும் திருமணம் செய்யதான் போகிறோம் என்று கூறி சமதானம் செய்து விட்டார். பின்னர் இருவரும் அடிக்கடி கோவையில் தனிமையில் சந்தித்து உல்லாசம் இருந்து உள்ளனர். இவரை திருமணம் செய்ய கேட்கும் போது ஏதாவது காரணத்தை சொல்லி தட்டிகழித்து வந்துள்ளர்.

 

மேலும் தற்போது வேரு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட பெண் திருமணம் செய்வதாக கூறி பல முறை கற்பழித்தவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று பவாணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!