திருவரங்கம் பெரிய கோவிலுக்கு எதிராக ஸ்தலத்தார்கள் ! – தொடர் – 7

ஸ்தலத்தார்களுக்கு வால் பிடிக்கும் ரங்கராஜ நரசிம்மனா, இல்லை, ஸ்தலத்தார்களின் ஆச்சார்ய புருஷனா? தொடர் - 7

0 355

ஸ்தலத்தார்களுக்கு வால் பிடிக்கும் ரங்கராஜ நரசிம்மனா, இல்லை, ஸ்தலத்தார்களின் ஆச்சார்ய புருஷனா?

 

திருவரங்கம் பெரிய கோயிலில் ஸ்தலத்தார்களின் சாஸ்திர, ஸம்பிரதாயத்திற்கு விரோதமான செயல்பாடுகள் –  ஸ்தலத்தார்கள் தொடர் – 7

 

திரு.ரங்கராஜ நரசிம்மன் அவர்களே, கடந்த சில வருடங்களாக Face book, You tube, Whatsapp போன்ற சமூக வலைதளங்களில் தமிழக திருக்கோயில்களை காக்க வந்தேன் பேர் வழி என சொல்லி உங்களது பயணத்தை தொடங்கினீர். முதலில் கோயில்களில் எதுவும் சரியாக நடக்கவில்லை என ஆரம்பித்தீர், பின்னர் திருக்கோயில் நிர்வாகத்தை திட்ட ஆரம்பித்து, நிர்வாகம் செய்பவர்கள் அனைவரையும் வசைபாட ஆரம்பித்தீர்.

 

அறநிலையத்துறையை அறங்கெட்ட துறை என வசைபாட ஆரம்பித்து உண்மையாக, நேர்மையாக, சரியாக இருக்கும் நபர்களையும் வசைபாட ஆரம்பித்தீர்.  இதனால் உன்னுடைய சுயரூபம் தெரியாத இந்து அமைப்புகள் உன்னை ஏதோ இந்துசமய போராளி என நினைத்து, விபரம் தெரியாமல் உனக்கு ஆதரவு அளித்து வந்தனர்.  பின்னர் பிஜேபி, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் என அனைத்து இந்து அமைப்பினரையும் அதில் உள்ள தலைவர்களையும், முக்கிய நபர்களையும் வசைபாட தொடங்கி,

 

திருக்கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் முதல் கைங்கர்யம் செய்யும் அனைத்து தரப்பினரையும் வசைபாட ஆரம்பித்தீர். அதன் பின்னர் திருக்கோயில் திருப்பணி செய்பவர்கள், திருக்கோயிலுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள், ஆன்மீக பெரியோர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள், இறை தொண்டு ஆற்றுபவர்கள் என எவரையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக வைணவ நூல் வெளியீட்டாளரும், வைணவ ஆய்வாளரும், ஸ்ரீவைணவ பெரியவர் ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீகிருஷ்ணமாச்சாரி அவர்களை செம்பு தூக்கி என கீழ்தரமாக திட்ட ஆரம்பித்து, உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன்சுவாமி அவர்களிடம் உபதேச வகுப்புகளுக்கு சென்றுவிட்டு, அவரையே சமூகவலைதளங்களில் கேவலமாக திட்ட ஆரம்பித்ததை அனைவரும் அறிவர்.  அதன்பின்னர், மடாதிபதிகள், திருப்பதி பெரிய ஜீயர் மற்றும் சின்னஜீயர் சுவாமிகளையும் வசைபாட ஆரம்பித்து திருப்பதி கோயில் நிர்வாகத்தையும் திட்ட  ஆரம்பித்துவிட்டாய்.

 

ஒவ்வொரு மனிதருக்கும், ஒவ்வொரு அமைப்பிற்கும், ஒரு நோக்கம் இருக்கும்.  இப்போது  புரிகிறது இவரின் நோக்கம்.  வெளிநாட்டில் இருந்து வந்த இவரை யாரோ பின்புலத்தில் இருந்து கொண்டு இயக்க, இவர் அந்த வேலையை செய்கின்றாரா என எண்ண தோன்றுகிறது?

 

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான பெரிய  திருக்கோயில்களில்   12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம்  நடைபெற்று வருவதையும், சிறிய திருக்கோயில்களில் கூட திருப்பணி நடைபெற்று வருவதை பொறுக்காத ரங்கராஜ நரசிம்மன் முதலில் திருப்பணி வேலைகள் திருக்கோயிலில் நடைபெறுவதை தடுக்க அனைத்து வேலைகளையும் செய்தார்.

 

அதன்பிறகு திருப்பணி வேலைகளை உபயத்திருப்பணியாக செய்ய முன் வரும் நன்கொடையாளர்களை குறி வைத்து  அவர்களை வசைபாடுவது மற்றும் கீழ்தரமாக பேசுவது போன்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.  அவர்கள் மீது வேண்டுமென்றே புகார் கொடுத்து அவர்களின் மனதை வேதனைபடுத்தும்   வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.

 

உதாரணமாக சென்னை அருகில் சிங்க பெருமாள் கோயில் என்ற ஊரில் அமைந்துள்ள பெருமாள் திருக்கோயில் இராஜகோபுரம் கட்டும் பணியினை ஸ்ரீமுதலியாண்டான் சுவாமிகள் மேற்கொள்ளும் போது அதை தடுக்க எத்தனை காரியங்களை செய்தார்.

 

திருவெள்ளறையில் பாதி நிலையில் நின்று போன மொட்டை கோபுரத்தை ரூ.5 கோடிக்கு மேல் திருப்பணி செய்ய வந்த கோயம்புத்தூரை சேர்ந்த நன்கொடையாளர்களை உண்மைக்கு புறம்பாக, தவறாக, விமர்சிக்கும் வேலையை செய்ய ஆரம்பித்து, அவர்கள் ஏன் திருப்பணி செய்ய வேண்டும், இது நமக்கு தேவைதானா என வருத்தப்ட்டு ஒதுங்கி விடும் நிலையை ஏற்படுத்த எல்லா வேலைகளையும் செய்தார்.  இதனால் தமிழ்நாடு முழுவதும் திருப்பணி செய்ய நன்கொடையாளர்கள் யாரும் முன்வராத நிலையை உருவாக்கினார்.

 

இந்தியாவின் மிகச்சிறந்த தொழில் அதிபரும், தமிழ்நாட்டை சேர்ந்த TVS  மோட்டார்ஸ் கம்பெனி நிறுவனத்தின் தலைவரும், பத்மவிபூஷன் திரு.வேணு ஸ்ரீனிவாசன் அவர்கள் பல இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு தந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வருவதோடு தமிழக தொழில்துறை வளர்ச்சிக்கு பங்காற்றி வரும் வாழும் மகான் ஆவார்.

 

தொழில்துறை மூலம் வருவாய் ஈட்டி தன் குடும்பத்தினருடன் நிம்மதியாக ஆடம்பர வாழ்க்கை வாழாமல் திருக்கோயில் தொடர்பான அறப்பணியிலும், சமுதாய பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி  கொண்டு உன்னத வாழ்க்கை  வாழ்ந்து வருபவர்.

 

தமிழ்நாட்டில் உள்ள புராதான, வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில்கள் சிதலமடைந்து, வழிபாடற்ற, பூஜை செய்ய முடியாத திருக்கோயில்களில் முழுமையாக திருப்பணிகள் மேற்கொள்வது, மேலும், திருக்கோயில்கள் அமைந்துள்ள கிராமங்களின் அனைத்து வகையான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது,  கிராமங்களின் பொருளாதார வளர்ச்சி, கல்விச் சேவை, வேலை வாய்ப்பினை பெருக்குவது, சுற்றுச்சூழல் மேம்பாடு, மருத்துவ வசதி, விவசாய தொழில்நுட்ப மேம்பாடு, நீர்மேலாண்மை, காடுகள் வளர்த்தல், பெண்களுக்கு சுயதொழில் தொடங்கி அவர்களின் மேம்பாட்டிற்கு உதவுவது, ஒருசில கிராமங்களில் உள்ள சிறப்பு தொழில் புரியும் குடும்பங்களுக்கு குறிப்பாக நெசவுத்தொழில், மண்பாண்டம் செய்வோருக்கு நவீன தொழில்நுட்ப உதவி அளித்து அவர்களின் பொருட்களை விற்பனை மேம்பாடு போன்ற பணிகளை அறக்கட்டளை மூலம் செய்து வருகின்றார்.  இதுவரை சுமார் 5000-க்கு மேற்பட்ட கிராமங்களில் இந்த அறக்கட்டளை மூலம் அறப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சமுதாயப்பணி ஆற்றிவருபவர்.

தமிழர்களின் கலை பண்பாடு மற்றம் வரலாற்று பொக்கிஷங்களாக திகழும் தமிழக திருக்கோயில்கள், சிதலமடைந்தும், பாழடைந்தும் போன புராதான, வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில்களை, பழமை மாறாமல் சிற்ப சாஸ்திர முறைப்படி திருப்பணிகள் மேற்கொண்டு  இதுவரை சுமார் 400-க்கு மேற்பட்ட திருக்கோயில்களில் பலகோடி ரூபாய் செலவில் முழுமையாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட விபரம் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் அறிந்ததே. திருநெல்வேலி மாவட்டம் நவதிருப்பதில் அமைந்துள்ள பெரும்பாலான திருக்கோயில்களில் முழுமையாக திருப்பணி மேற்கொண்டவர்.

 

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருப்பணி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றபோது அப்போதைய திருப்பணி கமிட்டி தலைவர் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தை சேர்ந்த ஸ்ரீசங்கரானந்தசுவாமிகள் இவரை அணுகி திருப்பணிக்கு உதவிட கேட்டதற்கு அவரிடம் உபயதாரர்கள் முன்வராத அனைத்து திருப்பணி வேலைகளை செய்து கொடுக்கின்றேன் என கூறி செய்து கொடுத்தவர்.

 

2002 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையார் திருக்கோயில் தங்க கொடிமர திருப்பணியை சுமார் 13 Kg தங்கத்தால் திருப்பணி செய்து கொடுத்தார்.  வேலூர் – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சந்தவாசல் என்ற ஊருக்கு அருகிலுள்ள படவேடு கிராமம்,  சம்புவராயர்களின் தலைநகரமாக விளங்கியது.

முஸ்லீம் படையெடுப்பின் போது படவேடு நகரில் உள்ள 100 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களை சேதப்படுத்தினர். சுமார் 600 ஆண்டுகளுக்கு பின்னர் 1992  ஆண்டுவாக்கில் இதனை அறிந்து இந்த வரலாற்று பொக்கிஷங்களாக திகழும் திருக்கோயில்களை புனரமைக்க தொடங்கி 25 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களை பழமைமாறாமல், சிற்ப சாஸ்திர முறைப்படி திருப்பணிகள் மேற்கொண்டதோடு தற்போது வரை பராமரித்து வருவதோடு நித்திய காலபூஜைகள் முறையாக நடந்து வர உதவிவருகிறார்.

படவேடு கிராமத்திற்கும், மக்களுக்கும் இவர் செய்துள்ள அறப்பணிகள் ஏராளம். சைவ திருக்கோயில்கள், வைணவ திருக்கோயில்கள் மட்டுமல்ல, கிராம தெய்வங்களின் திருப்பணிகள் என எந்த பாகுபாடு இல்லாமல் திருப்பணி செய்து வருபவர். முத்தாய்ப்பாக ஸ்ரீரங்கம் திருக்கோயில் திருப்பணியை செம்மையாகவும், சிறப்பாகவும் செய்து உலகமே பாராட்டும்வண்ணம் செய்தவர்.

 

தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் உள்ள திருச்சூர் வடக்குநாதன் கோயிலில் மரத்தினால் ஆன, அழகிய வேலைபாடுகளுடன், பழமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு யுனெஸ்கோ விருதும், கேரள அரசால் பாராட்டும் பெறப்பெற்றது.  ஆந்திராவில் வேங்கடகிரி கோட்டையில் உள்ள புராதான கோயில்களை அங்குள்ள வேங்கிடகிரி ராஜவம்சத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க திருப்பணி முதல் கும்பாபிஷேகம் வரை மேற்கொள்ளப்பட்டது.  ஆந்திரா, கர்நாடக, கேரளா, வடமாநிலங்களில் திருப்பணி செய்துவரும் திருப்பணி செம்மல்.

திருப்பணியோடு நிற்காமல் பலநூறுக்கு மேற்பட்ட வருமானம் இல்லாத கோயில்களில் நித்திய பூஜைகளுக்கு உதவுவது, திருக்கோயில்களில் முழுமையாக திருப்பணி செய்து குடமுழுக்கு செய்வதோடு அந்த திருக்கோயில்களில் தொடர்ந்து காலபூஜைகள் முறையாக நடைபெறவும், தூய்மை மற்றும் மராமத்து பணிகள் வரை தொடர்ந்து செய்துவருவது,  அர்ச்சகர்கள் மற்றும் கைங்கரியம் செய்பவர்களுக்கு குடியிருப்பு  வசதிகள் செய்து தருவது மற்றும் மாதந்தோறும் சம்பாவணை (உதவித்தொகை) வழங்குவது போன்ற உதவிகள் செய்வது, தமிழ்நாட்டில் மாதந்தோறும் சுமார் 1000-க்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் மற்றும் கைங்கரியம் செய்பவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருபவர்.

இதற்கு மேலாக தமிழக சிற்பகலை அழிந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக சிற்ப சாஸ்திரத்தினை முறைப்படி கற்றுக்கொடுத்து நல்ல ஸ்தபதிகள் உருவாக வேண்டும் என்பதற்காக கும்பகோணத்தில் சிற்ப சாஸ்திர பாடசாலை உருவாக்கப்பட்டு, அங்கு பயிலும் மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை, உதவித்தொகையுடன், மாணவர்களுக்கு சிற்ப சாஸ்திரம் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது.

 

வேணு ஸ்ரீனிவாசன்  நற்செயல்களையும், திருப்பணிகளையும் சொல்ல வேண்டுமானால் பல ஆயிரம் பக்கங்கள் போதாது.  இவ்வளவு உதவிகள் செய்தாலும் எந்த இடத்திலும் தன்னுடைய பெயரையோ, நிறுவனத்தின் பெயரையோ பதிவு  செய்தது இல்லை.

 

அந்த அளவுக்கு பெருந்தன்மையை கொண்ட மாமனிதரை திருப்பணி செய்யவிடாமல் தடுப்பதற்கான அனைத்து வேலைகளை செய்தவர்.

 

திருப்பணி நடைபெறவில்லையெனில் திருக்கோயில்கள் அழிந்து போகும் என்ற உள்நோக்கத்தோடு வேணு ஸ்ரீனிவாசன் அவர்களை பற்றி உண்மைக்கு மாறாக, தவறாக, கீழ்தரமாக பேசி வருவதை நோக்கமாக செய்து வருகின்றார் ரங்கராஜ நரசிம்மன்.

உண்மைக்கு மாறாக தொடர்ந்து பொய்யாக பேசிவரும் இந்த ரங்கராஜ நரசிம்மன் இதுவரை 1 ரூபாயாவது யாருக்காவது உதவி செய்து இருப்பாரா? திருப்பணிக்கோ, திருக்கோயில் மேம்பாட்டிற்கு, திருக்கோயில் நலனுக்கு என ஏதாவது செய்திருப்பாரா?

ஆனால் நல்ல செயல்கள் நடைபெறாமல் இருக்க வழக்கு போடுவது மற்றும் இதர வழிகளில் திருப்பணியை தடுக்க இவர் செலவழித்த தொகைகள் ஏராளம் இருக்கும். இதற்கெல்லாம் இவருக்கு பணம் எங்கிருந்து வருகின்றது.  உனது நோக்கம் மற்றும் உனது எண்ணம் என்ன என்பது தற்போது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

சாஸ்திர, சம்பிரதாயம் பேசும் நீர், கடல் கடந்து செல்லக்கூடாது என தெரியாதா?  அப்படி கடல் கடந்து சென்று வெளிநாட்டில் கோட்டு சூட்டு போட்டு பலவருடங்கள் இருந்துவிட்டு, வெளிநாட்டு நாகரீகத்திலும், மோகத்திலும் வாழ்ந்துவிட்டு தற்போது பஞ்சகட்சம் கட்டி வைணவ வேடம் போட்டு சாஸ்திர, சம்பிரதாயம் பேசலாமா?  தரமில்லாத வார்த்தையால் அனைவரையும் வசைபாட உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது?

வெளிநாட்டில் இருந்து வந்து, திருக்கோயில்களையும், திருக்கோயில் தொடர்பான சமயங்களையும் விமர்சிக்கும் வேலை செய்ய ஆரம்பிக்க திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் உங்களது  வேலையை முதலில் ஆரம்பித்தாய்.  அங்குள்ள வைணவர்கள் உன்னையும் உனது நோக்கத்தை புரிந்து கொண்டு அங்கிருந்து  விரட்டிவிட்டனர்.

 

அதன்பின்னர், உனது ஆச்சாரியன் திருவல்லிக்கேணி திருமணிசுவாமிக்கு கைங்கர்யம் செய்கிறேன் பேர்வழி என அங்கு நுழைந்தவுடன் உன்னைபற்றிய அனைத்து விபரங்களை அறிந்த உனது ஆச்சாரியனாலும், அங்குள்ள சிஷ்யர்களாலும் துரத்தி அடிக்கப்பட்டாய்.

 

கடைசியில் ஸ்ரீரங்கம் வந்து இந்து மதத்தை, சனாதன தர்மத்தை காக்கிறேன் என்ற போர்வையில், கோவில்களில் திருப்பணி வேலைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது ,திருக்கோயில் நிர்வாகத்தில் தலையிட்டு திருவிழாக்கள் மற்றும் நித்திய கால பூஜைகளுக்கு இடையூறு செய்வது, திருக்கோயில் நிர்வாகத்தை தானே கையில் எடுத்து செயல்படுவது போன்ற உனது அராஜகமான வேலைகளை ஸ்ரீரங்கத்தில் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.  முற்றிலும் ஒதுக்கப்பட்ட நிலையில் இங்குள்ள ஸ்தலத்தார்களில் சிலர், அவர்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக நேரடியாக செயல்படாத நிலையில் அவர்கள் உன்மூலம் அனைத்து காரியங்களையும் செய்யத்தொடங்கினர்.

ஏனெனில் கடந்த பல நூறு வருடங்களாக ஸ்ரீரங்கம் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக ஸ்தலத்தார்கள் கலகம் விளைவித்தவர்கள் என்பது வரலாறு.   அவர்கள் தற்போதுவரை உண்மைக்கு புறம்பாக, திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக செயல்படுவது என்பது அவர்களிடம் ஊறிப்போன விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஏதோ ஒரு பின்புலத்தில் என்ன நோக்கத்திற்கு வந்தாயோ அதற்கான இடம் ஸ்தலத்தார்கள் மூலம் கிடைத்துவிட்டதால் இங்கேயே தங்கி, வீடுகட்டி குடியிருந்து, இந்து மதத்தை ஸ்ரீவைணவத்தை, இந்து சம்பிரதாயத்தை, பிராமணர்களை, அடியார்களை, திருப்பணி செய்பவர்கள், கைங்கரியம் செய்பவர்கள், திருக்கோயில் தொடர்புடையவர்களை அவ்வளவு பேர்களையும் கேவலப்படுத்தும் வேலைகள் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்ய ஆரம்பித்தீர்.

சரியாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படும் அனைவரையும் உனது கோயபல்ஸ் சித்தாந்தத்தால் தவறாக சித்தரித்து கீழ்தரமாக பேசுகின்ற நீர், தவறான அநியாய செயல்புரியும் ஸ்தலத்தார்களுக்கு ஆதரவாக செயல்படுவது ஏன்?

இதற்கெல்லாம் உண்மையாக பதில் சொல்லிவிட்டால், ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீவைணவ அடியார்களாகிய நாங்கள், நீ சொல்வதை கேட்டு நடக்க தயார்.  உனக்கு பின்னால் இருந்து யாரும்  இயக்கவில்லை என நாங்கள் புரிந்து கொள்கிறோம்.  பதில் சொல்லவும்.

 

 1. ஸ்ரீவைணவ தென்கலை அய்யங்கார் என சொல்லிக்கொள்ளும் நீங்கள், திருமணம் செய்து கொண்டது மலையாள நாயர் இன பெண்ணா அல்லது வேறு பிரிவினரை சேர்ந்த பெண்ணா? திருமணம் என்பது தனிப்பட்ட விஷயம் தான் இது குறித்து கேட்பது முறையல்ல என்பது தெரியும்.  ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவைணவர்கள் சாதி, குலம் பார்க்க கூடாது என கூறியுள்ளார். ஆனால் பிராமணர்கள், உங்களது ஆச்சாரியன் திருவல்லிகேணி திருமணிசுவாமி இதை ஏற்றுக்கொண்டார்களா? நீங்க பேசும் சாஸ்திர சம்பிரதாயம் ஏற்று கொள்கிறதா?.

 

 1. ஸ்ரீ வைணவ வேஷம் போட்டுக்கொண்டு சம்பிரதாயம் பேசும் நீங்கள், கலப்பு திருமணம் செய்துள்ளதையும், வெளிநாட்டிற்கு கடல் கடந்து சென்றதும் சாஸ்திர ரீதியாக சரியா ?

 

 1. கொள்ளிடம் ஆற்றங்கரையில் நஞ்சை விவசாய நிலத்தில் மிக பிரம்மாண்டமான ஆடம்பர மாளிகை கட்டியுள்ளதற்கு மாநகராட்சியில் முறையான அங்கீகாரம் பெற்றுள்ளீர்களா? அனைவரும் சட்டபடி இருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் மீது வழக்கு தொடுக்கும்  நீங்கள் உங்களது வாழ்க்கையில் மட்டும் சட்டத்தை மதிக்கமாட்டீர்களா?

 

 1. விவசாய நஞ்சை நிலத்தை வீட்டு மனையாக மாற்றாமல் எந்த அடிப்படையில் வீடு கட்டப்பட்டது? இப்படி சாஸ்திரத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமாக செயல்படும் நீங்க  சாஸ்திர, சம்பிரதாயம் மற்றும் சட்டம் குறித்து பேசலாமா? நல்லவர்களை, சரியானவர்களை  வசைபாடும் நீங்க  ஸ்ரீரங்கம் ஸ்தலத்தார்களின் அநியாயங்களையும், தவறுகளையும் தட்டி கேட்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதன் நோக்கமென்ன?

 

 1. ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் ஸ்ரீபெருமாள், ஸ்ரீதாயாருக்கு அடுத்து குருபரம்பரையில் முதலாவதாக உள்ள ஸ்ரீவிக்ஷ்வசேனருக்கு முதலில் சடாரி மரியாதை செய்யாமல் அதற்கு முன்பாக ஸ்தலத்தார்கள் மரியாதை பெற்று கொண்டு, சாஸ்திர சம்பிரதாய செயலுக்கு எதிராக செயல்படும் ஸ்தலத்தார்களுக்கு ஆதரவாக செயல்படுவதன் மூலம் இச்செயலை ஏற்றுக்கொள்கிறீர்களா?

 

 1. கூரத்தாழ்வான் சன்னதி மற்றும் தொண்டரடிப்பொடியாழ்வார் சன்னதியில் தனித்தனியாக மடப்பள்ளி மற்றும் கிணறு இருந்தும் ஸ்தலத்தார்கள் வீட்டில் இருந்து பிரசாதம் தயார் செய்து கொண்டுவந்து சுவாமிக்கு நெய்வேத்தியங்கள் செய்கின்றார்களே இது குறித்து பதில் சொல்லாமல் இவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது ஏன்?

 

 1. தொண்டரடிப்பொடியாழ்வார் சன்னதியில் வேதவியாச நரசிம்மபட்டர் குடும்ப பெண் கோயிலை திறப்பது, பூட்டுவது, கைங்கர்யம் செய்வது சரியா? இது குறித்து விளக்கவும்.

 

 1. எவ்வித கைங்கர்யம் ஏதும் செய்யாமல் பக்கதர்களின் காணிக்கையாக செலுத்திய பணத்தில் மரியாதை, பிரசாதம் பெறுவதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இது குறித்து வாய் திறக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதன் நோக்கம் என்ன?

 

 1. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மானிய நிலங்களை விற்பனை செய்துள்ள ஸ்தலத்தார்கள் பற்றி ஏதும் கூறாமல் சிவன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆணையர் அவர்கள் பொது அறிவிப்பு மூலம் சட்ட விதிகளின்படி விற்பனை செய்ய முயலும் போது கொதிக்கும் நீங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் நிலத்தை முறையான அனுமதியின்றி விற்பனை செய்த ஸ்தலத்தார்கள் பற்றி ஏதும் கூறவில்லையே ஏன்?

 

 1. பராசர பட்டருக்கு குழந்தைபேறு இல்லாத நிலையில், யாரையும் தத்து எடுத்ததாக செய்தி ஏதும் இல்லாத நிலையில் பத்ரிபட்டர் வகையறாவினர், பராசர பட்டர் வம்சம் என எப்படி கூறுகின்றனர்? அநியாய, அக்கிரமங்கள் செய்யும், இது போன்ற தவறான நபர்களுக்கு ஆதரவாக செயல்படுவது, நல்லவர்களை, தவறுசெய்யாதவர்களை குற்றவாளிகள் போல் சித்தரிப்பது ஏன்?

 

 1. திருக்கோயிலுக்கு வெளியே மிக குறைந்த நபர்கள் நின்று இருசக்கர வாகன பூஜை செய்ததைக்கண்டு கொதித்து, அர்ச்சகர்களை கேவலப்படுத்தும் நீர், ஆடிப்பூரம் அன்று வெளிஆண்டாள் சன்னதியில் ஸ்தலத்தார் அண்ணங்கார் கோயிலுக்குள் வேண்டப்பட்டவர்களை கொரோனா நேரத்தில் உள்ளே அனுமதித்து கொண்டிருக்கையில், ஊரே திரண்டு பிரச்சனையாகி, காவல்துறை வந்து எச்சரித்து ஒழுங்குபடுத்தியது. அந்த அண்ணங்காரரை பற்றி சமூக வலைதளத்தில் கண்டிக்காதது ஏன்?

 

 1. ஸ்ரீராமானுஜரே மணலில் விளையாடிய குழந்தைகள் கொடுத்த மணல் பிரசாதத்தை பகவான் பிரசாதமாக பவ்யமாக வாங்கியது வரலாறு. ஆனால், இப்போதுள்ள ஸ்தலத்தார்கள் அரங்கனின் அருட்பிரசாதத்தை இதுவரை கையில் வாங்காமல் ஆள்வைத்து வாங்கும் அவலத்தை ஏன் இதுவரை கேட்கவில்லை?

 

 1. இவர்கள் ஒருசிலருக்கு தனிமனித ஒழுக்கமே இல்லையே அவர்கள் எப்படி ஸ்தலத்தார்கள் நிலையில் உள்ளார்கள். இதுபற்றி கேள்வி கேட்காமல் அவர்களுடன் சேர்ந்து கொண்டு உதவி செய்வது ஏன்?

 

 1. சன்னதிபேரர் என்ற முறையில் யார் யாரையோ கூட்டிவந்து, துண்டு விரிக்க, அழைத்து வந்து மரியாதை பெற்று தருவது சரிதானா? இதற்கு உங்கள் பதில் என்ன?

 

 1. இப்போது உள்ள ஸ்தலத்தார்களில் யாருக்காவது வேதம், பிரபந்தம், வைணவ சாஸ்திரம், சம்பிரதாயம் தெரியுமா? அர்ச்சகர்களை வசைபாடும் நீங்கள் இவர்கள் குறித்து பேச மறுப்பது ஏன்?

 

 1. ஸ்ரீரங்கம் திருக்கோயில் சன்னதிகளை தனிப்பட்ட நபருக்கு விற்றார்களே இது குறித்து பேசாதது ஏன்? தொண்டரடிப்பொடியாழ்வார் சன்னதியை திருக்குறுங்குடி ஜீயருக்கு விற்ற ஸ்தலத்தாரை விமர்சிக்காதது ஏன்? தசாவதார சன்னதியை விற்ற ஸ்தலத்தாரை விமர்சிக்கவில்லையே ஏன்?

 

 1. தென்கலை சம்பிரதாயத்தை சேர்ந்த ஸ்தலத்தார்கள் பணத்திற்காக வடகலையாருக்கு சன்னதிகளை விற்பனை செய்துவிட்டு தற்போது முழுமையாக தென்னாச்சார்ய சம்பிரதாயத்தை கடைபிடிக்க இயலாத நிலையை ஏற்படுத்திய ஸ்தலத்தார்களை விமர்சிக்காதது ஏன்?

 

இதற்கு பதில் சொல்லவில்லை எனில் ஸ்தலத்தார்களுக்கு வால் பிடிப்பதை நிறுத்தவும், தேவையில்லாமல் உண்மைக்கு புறம்பாக சமூக வலைதளங்களில் பேசுவதையும் நிறுத்தவும்  இதற்கெல்லாம் உண்மையாக, நேர்மையாக பதில் சொன்னால், திருக்கோயில்களின் நலனுக்காக, நல்லநோக்கத்திற்காக உள்ள உங்கள் பின்னால் வர நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

 

இவண்:   ஸ்ரீவைணவ பக்த சபாவை சேர்ந்த அடியார் பெருமக்கள். ஸ்ரீரங்கம்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!