ஆப்ரேஷன் முடிந்து டிஸ்சார்ஜ் ஆனவர் வயிற்றில் இருந்து வெளியே வந்த குடல்

0 606

 

ஆப்ரேஷன் முடிந்து டிஸ்சார்ஜ் ஆனவர் வயிற்றில் இருந்து  வந்த வெளியே வந்த குடல்

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடல்வால் அழற்சிக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு டிஸ்சார்ஜ் ஆன 75 வயது முதியவரின் வயிற்றில் போடப்பட்ட தையல் பிரிந்து அவரது குடல் வெளியே பிதுங்கியதால் அவரும், அவரது உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் மெத்தனப்போக்கு காரணாக தையல் பிரிந்ததாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால், வாகனத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட ‘குலுக்கல் காரணமாக தையல் பிரிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரத்தநாடு ஒன்றியம் தொண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (75). விவசாயக் கூலி.

வீராசாமிக்கு குலோத்துங்கன் (45), உதயகுமார் (37) என இரண்டு மகன்கள். மூத்த மகன் குலோத்துங்கன் சென்னையில் ஆட்டோ ஓட்டுகிறார். இரண்டாவது மகன் உதயகுமார் சிங்கப்பூரில் பணிபுரிகிறார்.

வீராசாமி தனது மனைவி அமுதாவுடன் தொண்டராம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வீராசாமி கடந்த வாரம் சுமார் நான்கு நாட்காளாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

 

இதைத் தொடர்ந்து, அவர் ஜுலை 21-ம் தேதி தொண்டராம்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று காண்பித்துள்ளார்.

அங்குள்ள மருத்துவர் அவரை பரிசோதித்துவிட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளார்.

இதைத் தொடர்;ந்து, வீராசாமி மறுநாள் (ஜுலை 22-ம் தேதி) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வீராசாமி ‘தீவிர துளையிடும் குடலிறக்க குடல் அழற்சி’யால் அவதிப்பட்டுவருவதைக் கண்டறிந்தனர். அவரது குடல்வாலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, அவர் அன்றைய தினமே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, மறுநாள் (ஜுiலை23) அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குடல்வால் அகற்றப்பட்டு வயிற்றில் தையல் போடப்பட்டது.

ஒருவாரகால சிகிச்சைக்குப் பின் இன்று (ஜுலை 29) காலை 11 மணியளவில் வீராசாமி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இனி மது அருந்தக்கூடாது என்றும், ஒருவாரம் கழித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று தையல் பிரித்துக் கொள்ளலாம் என்றும் கூறி மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர்.

 

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட வீராசாமியை அவரது உறவினர்கள் ஒரு காரில் தொண்டராம்பட்டு கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர்.

வீட்டுக்கு சென்றடைந்த வீராசாமிக்கு சுமார் 2 மணியளவில் அவரது வயிற்றில் போடப்பட்டிருந்த தையல் பிரிந்து குடல் வெளியே பிதுங்கியது. இதனால் அவரும், அவரது உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத் தொடரந்து, மாலை 5 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மீண்டும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, மாலை 6 மணியளவில் அவருக்கு மீண்டும் தையல் போடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!