காவல் துறையினர்தான் ரியல் ஹீரோ !  ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் !

0 359

காவல் துறையினர்தான் ரியல் ஹீரோ !  ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் !

 

 

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில்,  நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள்,  காவல்துறையினர் என அனைவரும் இரவு  பகல் என பாராமல் தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்களுக்கு கரோனா பரவி வருகிறது. இந்நிலையில், நகைச்சுவை நடிகர் ‘பரோட்டா’ சூரி இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டி1 காவல்நிலையத்துக்கு நேரில் சென்று காவலர்களை பாராட்டியதோடு, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி காவல்துறையினர் அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

 

பின்னர் நடிகர் சூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரோனா என்கிற கொடூரமான வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு, இரவு பகல் பாராமல் தங்களது குடும்பத்தைப் பிரிந்து, உயிரைப் பணயம் வைத்து காவல்துறையினர் வேலை செய்து வருகின்றனர். நடமாடும் தெய்வமாக, காக்கிச்சட்டை போட்ட அய்யனாராக காவல்துறையினர் நம்மை பாதுகாத்து வருகின்றனர்.

 

இன்று காவல்துறையினரையும் கரோனா விட்டுவைக்கவில்லை. அவர்களில் 50 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினர் பதறிப்போய் இருக்கின்றனர். தன்னலமின்றி செயல்படும் இவர்கள்தான் ரியல் ஹீரோ. வுழக்கமா நடிகர், நடிகைகள்,விளையாட்டு வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவோம். ஆனால் எனக்கு இவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கணும்னு தோணிச்சு. இவர்களிடம ஆட்டோகிராப் வாங்குவதை நான் பெருமையாக நினைக்கிறேன” என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!