திருச்சி கமிஷனர் உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
தமிழ்நாடு உள்துறை செயலர் எஸ் கே பிரபாகர் தமிழ்நாட்டில் உள்ள 10 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்டிருக்கிறார். இவ்வாறு ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்த அபய் குமார் சிங் ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாகவும் மாற்றப்பட்டிருக்கின்றார்.
மேலும் விடுமுறையில் இருந்த மகேந்திர குமார் ரப்போர்ட் தமிழ்நாடு சீருடை பணியாளர் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக இருந்த கார்த்திகேயன் திருச்சி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருண் போலீஸ் பயிற்சி கல்லூரியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மத்திய பணியிலிருந்து திரும்பிய சரவன சுந்தர் திருச்சி சரக்கு டிஐஜி மாற்றப்பட்டிருக்கிறார். திருச்சி சரக டிஐஜி அங்கிருந்து ராதிகா சென்னை ஜெனரல் டிஐஜியாக மாற்றப்பட்டிருக்கிறார்.
கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த என்எஸ் நிஷா கம்ப்யூட்டர் மயமாக்கல் பிரிவு பிரிவு எஸ்பியாகவும்,
சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு மாடசாமி, சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை கமிஷனர் பொறுப்பில் இருந்த வேதரத்தினம் சென்னை தலைமை இயக்குனர் (டிஜிபி அலுவலம்) பணியிடத்தில் நியமிக்கப்பட
உள்ளார்.