சர்ச்சை சிக்கலில் திருச்சி பிரபல கிறிஸ்தவ போதகர் !

0 443

திருச்சி கருமண்டபம் செல்வம் நகர் பகுதியில் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபை உள்ளது. இதை சுற்றி காலியிடங்களும் உள்ளது. இந்த சபைக்கு சொந்தமான இந்த இடத்தை ரூபாய் 7 கோடிக்கு விற்பதாக விஜிபி நிருவனத்துடன் கடந்த 2011ம் ஆண்டு அந்த ஏசி சபையின் மூத்த போதகர் ஒரு ஒப்பந்த போட்டார்.

புகார் கொடுத்த விஜிபி குரூப் திருச்சியை சேர்ந்தவர்கள்.

இந்த ஒப்பந்தத்தின் படி விஜிபி நிறுவனம் 6 கோடியே 88 இலட்சத்தை வங்கியின் மூலம் அந்த சபைக்கு செலுத்தியது. இந்த நிலையில் மீதமுள்ள ரூபாய் 12 இலடசத்தையும் பொற்றுக்கொண்டு நிலத்தை எழுதி தரும்படி போதகர் நார்மன் பாஸ்கரிடம் விஜிபி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் நார்மன் பாஸ்கரோ மீதம் உள்ள தொகையை வாங்கி கொள்ளாமலும், நிலத்தை எழுதிக் கொடுக்காமலும் காலம் தாழ்த்திக்கொண்டே வந்தார்.

A.G. Church (3)
ஏ.ஜி. சபையின் வெளிப்புற தோற்றம்.

அவர் 6 கோடியே 88 இலட்சத்தை மோசடி செய்து விட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐக்கோர்ட்டில் விஜிபி நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் நீதிமன்றம்  திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஐக்கோர்ட்டு உத்தரவிட்டது.

இதன் படி விஜிபி நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு நிலத்தை எழுதிக்கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் மோசடி செய்தாக போதகர் நார்மன் பாஸ்கர், மற்றும் சபையில் உள்ள கமிட்டி உறுப்பினர் ஸ்டாலின் மாணிக்கராஜ், ஸ்டீபன் ஜெயக்குமார், ஆபிரகாம் தாமஸ், மோகன் ஆகியர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர் இதனை இன்ஸ் பாலசுப்ரமணியன் விசாரித்து வருகிறார்.

Paster Norman Basker
ஏ.ஜி. சபையின் தலைமை போதகராக நார்மன் பாஸ்கர்.

இவர் அந்த சபை நிர்வாகத்தினர் யாருடனும் கலந்து ஆலோசனை செய்யாமல் விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டுவிட்டார் என்றும் இவ்வளவு பணத்தை ஸ்பாதனத்தில் ஒப்படைக்காமல் இவரே தனிப்பட்ட முறையில் செயல்பட்டுவிட்டார் என்று நிர்வாகத்தின் சார்பில் நார்மன் பாஸ்கரை சிறிது காலம் ஒதுக்கி வைத்திருந்தனர். விஜிபி ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்துபவர்கள் கிறிஸ்தவ சகோதரர்கள் அவர்களும் தமிழகம் முழுவதும் முக்கியமான நகரங்களில் கிறிஸ்தவ சபைகளை நடத்தி வருகிறார்கள். திருச்சியிலும் திண்டுக்கல் பைப்பாஸ் சாலையில் மிகப்பெரிய சபையை நடத்தி வருகிறார்கள்.

நார்மன் பாஸ்கரை கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும் போது….

வழக்கு பதிவு செய்த போலிசாரிடம் இதுவரை சிக்காமல் இருந்தவர் தற்போது திருச்சி கண்டோன்மென்ட் போலிசார் கை து செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

கடைசியில் கிறிஸ்தவ நிறுவனவே கிறிஸ்தவ சபையின் போதகர் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்து இருப்பது தான் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆயிரக்கணகான மக்களை நல்வழியில் போதிக்கும் போதகர் நார்மன் பாஸ்கரே இப்படி மோசடியில் ஈடுபட்டது தான் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!