எந்தவிதமான கைங்கர்யம் செய்யாமல் திருக்கோயிலில் இருந்து பெறும் ஸ்தலத்தார் – தொடர் – 6

0 836

ஸ்ரீரங்கம் ஸ்தலத்தார் வேதவியாசபட்டர், பராசரபட்டர் வகையறா எந்தவிதமான கைங்கர்யம்.  செய்யாமல் திருக்கோயிலில் இருந்து பெறும் மரியாதைகள் ! – ஸ்தலத்தார்கள் தொடர் – 6

 

 

ஸ்ரீரங்கம் ஸ்தலத்தார்  வேதவியாசபட்டர், பராசரபட்டர் வகையறா   எந்தவிதமான கைங்கர்யம்.  செய்யாமல் திருக்கோயிலில் இருந்து பெறும் மரியாதைகள் விபரம்.  ஸ்ரீரங்கம் ஸ்தலத்தார்களின் சாஸ்திர  மற்றும் சம்பிரதாய விரோத செயல்பாடுகள் – 6 (ஆறு)

 

ஸ்ரீவைணவ ஆச்சாரியரும், ஸ்ரீராமானுஜரின் ஆத்மார்த சீடரான ஸ்ரீகூரத்தாழ்வானின் குமாரர், ஸ்ரீபராசர பட்டருக்கு  குழந்தை பேறு இல்லாத காரணத்தால் அன்னாரின் அந்திம காரியங்களை அவரின் சகோதரர் ஸ்ரீவேதவியாதபட்டர் செய்ததாக கோயில் ஒழுகு நூல் கூறுகின்றது.

குழந்தை பேறு இல்லாத நிலையில் ஸ்ரீபராசரபட்டர் யாரையும் தத்து எடுத்ததாக எவ்விதமான ஆதாரமோ, செவிவழி செய்தியோ இல்லை.  உண்மை நிலை இவ்வாறாக இருக்கையில் தற்போது பராசர பட்டர் வம்சம் நாங்க என சொல்லிக்கொண்டு   திருக்கோயின் நலனுக்கும், வளர்ச்சிக்கும், விரோதமாக செயல்படுகின்ற இவர்கள், ஸ்ரீபராசரபட்டரின் வம்சா வழி வந்தவர்கள் என்பதனை நிருபிக்க முடியுமா.

 

இவர்கள் பூர்வீகம் எது என ஸ்ரீரங்கத்தில் உள்ள   விஷயம் தெரிந்த ஸ்ரீவைணவர்களுக்கு தெரியும். இப்போது உள்ள பராசர பட்டர் வம்சம் என சொல்லிக் கொள்ளும் இவர்களில் ஒரு சிலரிடம் தனிமனித ஒழுக்கமே இல்லாதவர்கள் என்பது பலருக்கு தெரிந்த உண்மை. இவர்களில் எத்தனை பேர் வேதம் படித்துள்ளார்கள். பிரபந்தம் படித்துள்ளார்கள்.  ஸ்தலத்தார்கள் என சொல்லி கொள்ள என்ன தகுதியிருக்கிறது. இது குறித்து பத்ரிபட்டர் வாய் திறந்து பேச மாட்டார், ஆனால் உண்மைக்கு புறம்பாக, திருக்கோயிலுக்கு எதிராக தேன் ஒழுக பேசுவார்.

 

நீங்க என்ன வேலை செய்து கொண்டு இருக்கின்றீர்கள், தங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்ததது என அதன் உண்மை நிலையினை வெளிப்படுத்துவீர்களா? இந்த வம்சத்தில் நீங்களெல்லாம் எப்படி வந்தீர்கள், அதற்கான என்னவெல்லாம்  வேலைகள்  செய்தீர்கள் என கோயில் ஒழுகு நூல் சொல்லும். ஸ்தலத்தார்கள் என சொல்லி கொள்ளும் நீங்கள் எப்போதும் திருக்கோயில் நலனைக்கு எதிராக செயல்படுவது, கோயிலுக்குள் கலகம் விளைவிப்பது போன்ற செயல்களை இப்போது மட்டுமல்ல, எப்போதும் செய்யும் கீழ்தரமான புத்தி கொண்டவர்கள் என்பதை ஆதாரத்தோடு பார்ப்போம்.

ஸ்ரீரங்கம்  கோயில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்டு பேஷ்கார் வரதப்ப நாயுடு என்பவரிடத்துதான்  நிர்வாகப் பொறுப்பு இருந்தது.  அந்த சமயம் இக்கோயில் ஸ்தலத்தார்கள் எல்லாம் கூடி  கலகம் செய்தனர்.  அந்த சமயம் வெள்ளைக்காரத் துரை, அஸிஸ்டெண்ட் கலெக்டர் மேஸ்தர் ஹென்றி பெத்ரிஷ் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 05.02.1824 அன்று விசாரணை நடைபெற்றது.  அந்த சமயம் இங்குள்ள ஸ்தலத்தார்கள் அனைவரும் தனித்தனியே விசாரணைக்குட்படுத்தப் படுகின்றனர்.  அப்போது இந்த ஸ்தலத்தார்கள் அவரிடத்தில், தங்கள் பணிகள் குறித்து அளித்த வாக்குமூலம் முக்கியமானது..

இவர்கள் அனைவரும் தங்களை ஸ்தலத்தார்கள் என்றோ, ஸ்ரீரங்கம் நிர்வாகம் தங்களையேச் சார்ந்தது என்று கூறவில்லை..

 

மாறாக, கும்பினித் துரைக்கு கொடுத்த வாக்குமூலத்தில்,

 

“”””… ஸ்ரீறெங்கத்திலிருக்கும் ஊழியக்காரனாகிய  பராசர பட்டர் எழுதி கொடுத்த முச்லிக்கா..”””” என்று தம்மை  ஊழியக்காரனாகவே அடையாளம் கொள்கிறார்.

தங்களுடைய பணிகளாக

 

“”””… வேத பாராயணம் செய்கிறது

வுள்ளூராவூழியமாகிய துப்பட்டிக் கொண்டு போரது

வெள்ளி பாத்ர ஸாமான்கள் கொண்டு வருகிறது

திருப்பதியார் ஊழியமாகிய தீவட்டி பிடிக்கிறது

திருவிளக்கு போடுகிறது

திருவமக்கனமாகிய சாமியை எழுந்தருளச் செய்கிறது

அருளப்பாடு ஸாதிக்கிறது

சாமரம் போடுகிறது..””””

 

இவையனைததையும் தம்முடைய பணிகள் என்று தெளிவாக உரைக்கின்றார்.

தற்போது இதில் எந்த பணியையும் இவர்கள் செய்யவில்லை.

இதில் குறிப்பிட்டுள்ள ஒன்றைக்கூடச் செய்ய தகுதியில்லாதவராகி விட்டனர்.

 

வேதவியாசபட்டர் வகையினர்  திருக்கோயிலில் செய்ய வேண்டிய பணிகள் விபரம்.;-

திருமஞ்சன ஊழியம் என்று சொல்லப்பட்ட தீர்த்தம் கொண்டு வருவது,

பாலூழியம்,

ஸ்ரீ பாதம் தாங்குவது

சாமரம்,

கொடை,

குஞ்சம்,

திருமலைவட்டம்,

காளாஞ்சி,

வெள்ளி வட்டில் கொண்டு போடுறது

திருப்பதியார் ஊழியமாகிய தீவட்டிப் பிடிக்கறது,

விளக்குப் போடறது,

பெருக்கிறது,

பாவு கொண்டு வந்து கொடுக்கறது,

தலகாணி கொண்டு போரது,

திருஒலக்கை நாயகம்.

 

இந்த மேற்கண்ட வேலையில் எந்த வேலையும் செய்யாமல், கடந்த 75 ஆண்டுகளாக இந்த தகுயில்லாத ஸ்தலத்தார்களுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தில் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பெறும் பிரசாதம் மற்றும் மரியாதைகள் என்னவென என்ற விபரத்தை பார்போம்.

 

இவர்கள் வீட்டில் யார் எப்போது இறந்தாலும்

 

வேதவியாச பட்டர் அல்லது  ஸ்ரீபராசர பட்டர்  வீட்டில் யாராவது இறந்து போனால்

ஆழ்வார் தோசை – 200 எண்கள்

வடை   – 200 எண்கள்

சாதம் தளிகை அரிசி 75 கிலோவிற்கு ரொக்கம்

திட்டக் கிரயம் தளிகை  75 கிலோவிற்கு

பாசிப்பயர் 2 ½   கிலோ

உப்பு ½   கிலோ

இடித்த புளி 1.750

நெய்  135 கிராம்

பாக்கு 140 கிராம்

வெற்றிலை 200 எண்

சந்தனம் 88 கிராம்

*சாத்துப்படி அறை கூலி கிலோ ஒன்றுக்கு *

மாவு இடி கூலி கிலோ ஒன்றுக்கு

உள்சாத்து 2 கைலி 5 முழம்

உள்சாத்து பட்டு 5 முழம்*

மேலும் வீட்டின் முன் பந்தல் போடுவது, வாழைமரம் கட்டுவது போன்றவையும்.

 

வேதவியாச பட்டர் அல்லது ஸ்ரீபராசர பட்டர் வீட்டில் யாருக்காவது குழந்தை பிறந்தால்

திருக்கோயிலிருந்து விளக்கெண்ணெய் முதற்கொண்டு  பெற்றுக்கொண்டு ஸ்ரீவைணவத்திற்கும், திருக்கோயிலுக்கும்,  ஸ்ரீநம்பெருமாளுக்கும் எதிரானவர்களாக எப்போதும் செயல்பட்டு வருகின்றனர்.

 

விளக்கெண்ணை  – 1.250 கிலோ

சுக்கு – 0.350 கிலோ

மிளகு – 0.350

வெல்லம் – 4.400 கிலோ

சந்தனம் – 0.175

வெற்றிலை – 500 எண்கள்

பாக்கு   –  315 கிராம்

காப்பரிசி 22.500 கிலோவில் – 1.250 கிலோ

போக 21.250 கிலோவிற்கு ரூ.1.20/- வீதம் ரொக்கம்

சாத்துப்படி அறை கூலி கிலோஒன்றுக்கு

 

ஸ்தலத்தார்களின் வீட்டில்  யாருக்காவது கல்யாணம் நடந்தால் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து இவர்கள் கேட்டு வாங்கும் பிரசாதங்கள்

வேதவியாச பட்டர் அல்லது ஸ்ரீபராசர பட்டர்  வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால்

 

அதிரசம் – 200 எண்கள்

சுஹீலம் – 200 எண்கள்

பொங்கல் தளிகைக்கு அரிசி -30.000 கிலோ

 

 

தலத்தார் யாராவது இறந்து போனால் கோயில் மரியாதையுடன் அனுப்ப வேண்டிய உள்சாத்து விபரம்

 

2 கைலி  -10 முழம்

பட்டு – 10 முழம்

 

வேதவியாச பட்டர் அல்லது  ஸ்ரீபராசர பட்டர்  வகையறாவின் இறந்தநாள் திதிக்கான பிரசாதம்

ஆழ்வார் தோசை – 300 எண்கள்

அப்பம்   – 5 எண்கள்

தேன்குழல்   – 5 எண்கள்

சாதம்  தளிகை  அரிசி 37.500  கிலோவிற்கு

பாக்கு 0.140 கிராம்

வெற்றிலை 200 எண்

சந்தனம் 90 கிராம்

மாவு இடி கூலி கிலோ ஒன்றுக்கு 0.20 ந.பை வீதம்

சாத்துப்படி அறை கூலி கிலோ ஒன்றுக்கு ரூ.3.00வீதம்

 

 

வேதவியாச பட்டர் அல்லது  ஸ்ரீபராசர பட்டர் குடும்பத்தினரின் பிறந்தநாளுக்கான பிரசாதம்

 

ஆழ்வார் தோசை – 300 எண்கள்

சாதம்  தளிகை  அரிசி 37.500  கிலோவில் உள்சாத்து அலங்காரம் 1.875 கிலோ போக பாக்கி 35.625 கிலோ

பாக்கு 0.140 கிராம்

வெற்றிலை 200 எண்

சந்தனம் 90 கிராம்

மாவு இடி கூலி கிலோ ஒன்றுக்கு 0.20 ந.பை வீதம்

சாத்துப்படி அறை கூலி கிலோ ஒன்றுக்கு ரூ.3.00வீதம்

 

 

எம்பெருமானார் ஸ்ரீராமானுஜரோ, ஆழ்வார்களோ, ஆச்சாரிய புருஷர்களோ, ஸ்ரீவைணவத்திற்கும், ஸ்ரீநம்பெருமாளுக்கும் தொண்டு புரிந்தார்ளே தவிர, எவ்வித மரியாதைகளையும் பெற்றதாக வரலாறு இல்லை.

 

இப்போது ஸ்தலத்தார்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் வேலை ஏதும் செய்யாமல் மார்பில் சந்தனத்தை பூசிக் கொள்வது, அபய அஸ்தம் பெறுவது, மரியாதை என்ற பெயரில் சாஸ்திர, சம்பிரதாயத்திற்கு விரோதமாக  சடாரி மரியாதை மற்றும் தீர்த்தம் பெறுவது மட்டுமல்லாமல்,  திருக்கோயில் பெயரை பயன்படுத்தி தன்னை ஆச்சாரிய புருஷர்கள் என சொல்லி இவர்கள் வசூல் வேட்டை சொல்லிமாளாது.

 

இப்படிப்பட்ட ஸ்ரீவைணவத்திற்கும்,திருக்கோயிலுக்கும் எதிராக செயல்படும் இவர்களை வெளியேற்ற திருக்கோயில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

 

 

இவண். உண்மை நிலையினை அறிந்து அனைவரும் இவர்களை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடும் ஸ்ரீரங்கம் அரங்கனின் அடியார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!