எலிபேஸ்ட் சாப்பிட்டு பலியான திருச்சி பெண் போலிஸ் !

0 526

 

கொரோனா என்கிற பேரழிவு நோயினால் உயிர் பயத்தில் மக்கள் அனைவரும் இருக்கிறார்கள். இதை சமாளிப்பது என்கிற பெரிய கவலையோடும் இருக்கும் இந்த நேரத்தில் பலர் தற்கொலை செய்து அதிகரித்து வருகிறது.

தமிழகம் முழுதுவதும் கடைகளில் விற்பனை செய்த எலிபேஸ்ட் தடை செய்தனர். பல கடைகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் பெண் போலிஸ் ஒருவரே எலிபேஸ்ட் சாப்பிட்ட விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அடுத்த மணப்பாறை வையம்பட்டி காவல்நிலையில் பணியாற்றும் பெண் காவலர் பாவானி இவர் கடந்த 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில்  9 வயது குழந்தையுடன் தனியே வாழ்கிறார்.

இந்த நிலையில் கோவை அரசு மருத்துமனையில் மெடிக்கல் சான்றிதல் வாங்குவதற்காக டூவிலரிலே சென்றிருக்கிறார். அப்போது வையம்பட்டியை அடுத்து  கே.புதுக்கோட்டை அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் கோக் குளிர்பானத்தில் டெலிபேஸ்ட் கலந்து சாப்பிட்டு கோவை சென்றிருக்கிறார்.

கோவை சென்று மீண்டும் மணப்பாறைக்கு திரும்பும் வழியில் மயக்கம் ஆக உடனே  கோவை அருகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறை கலையரசன் மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து திருச்சி தீபன் மருத்துமனைக்கு சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் மணப்பாறைக்கு  அரசு மருத்துமனைக்கு கொண்டு போய் பிறகு மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். . இது குறித்து மணப்பாறை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முதல் கட்ட விசாரணையில் தன்னுடைய  தோழி ஒருவருக்கு  3 இலட்சம் பணம் கொடுத்து சேர் மார்கெட்டிங்கில் முதலீடு செய்துள்ளார். இந்த கொரோனா காலத்தில் நஷ்டம் அடைந்ததால் பணம் திரும்ப கொடுக்க முடியாது என்று சொன்னதால் அதில் அடைந்த மன கஷ்டத்தில்  தற்கொலை செய்திருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை நடக்கிறது. !

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!