திருச்சி கோமதிக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை !

0 704

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் திருச்சி வீராங்கனை 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் “நாண்ட்ரோலன் ” என்னும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தெரியவந்தது.

இதனையடுத்து அவர் கடந்த ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அத்துடன் அவரது அடுத்த சோதனையையும் ஊக்க மருந்து உபயோகப்படுத்திய உறுதி செய்தது.

இந்த விவகாரம் குறித்து சர்வதேச தடகள நேர்மை குழு விசாரணை நடத்தியது விசாரணை முடிவில் கோமதி போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவித்தது.

மேலும் 2019ஆம் ஆண்டு மார்ச் 18ம் தேதி முதல் மே மாதம் 17ஆம் தேதி வரை கால கட்டத்தில் அவர் பெற்ற அனைத்து வெற்றிகளையும் சாதனை பட்டியலில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்ய கோமதி முடிவு செய்துள்ளார்.

திருச்சி அருகே உள்ள முடிகண்டம் கிராமத்தில் இருக்கும் கோமதி இடம் இதுகுறித்துப் பேசியபோது..

“நான் ஒருபோதும் ஊக்கமருந்து பயன்படுத்தியது கிடையாது எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து 11.6 .2020 அன்றுஅப்பீல் செய்ய இருக்கிறேன்.

ஆசிய தடகளத்தில் தகுதி சுற்றாக நடத்தப்பட்ட பெடரேஷன் கோப்பை போட்டியில் போது நான் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமை கூறியிருக்கிறது.

இந்த தகவலை அவர்கள் என்னிடம் முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் இத்தகைய தர்ம சங்கடங்களை சந்திக்க வேண்டியது இருக்காது.

நான் எந்த தவறும் செய்யவில்லை இந்தப் பிரச்சினை இருந்து விடுபட்டு மீண்டும் போட்டியில் பங்கேற்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!