அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு சீருடை!

0 410

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ‘சீருடை’

அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் யார், தரகர் யார் என அறிய முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுவதால், காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் காவலர் வரை அனைவரும் காக்கிச் சீருடை அணிவதுபோல, ஏனைய பிற அரசு துறைகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் சீருடை அணிய உத்தரவிட வேண்டும் என கூடங்குளம் அணுஉலை எதிர்;ப்பாளரும், பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனருமான சுப. உதயகுமாரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சுப. உதயகுமாரன் அவரது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
காவல் துறையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் பெண் உயரதிகாரிகள் அனைவரும் காக்கிச் சீருடை அணிவதுபோல, பெண் ஐஏஎஸ் அதிகாரிகள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான உயர் பதவிகளை வகிக்கும் பெண் அதிகாரிகள் அனைவரும் வாரத்தில் ஐந்து நாட்கள் சீருடை அணிய அரசு உத்தரவிட வேண்டும்.

பெண் உயரதிகாரிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் சேiலை அணிவதும், நகைகள் அணிவதும் அவர்களுக்கு ஒருவித மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களின்கீழ் வேலைசெய்யும் பெண்கள் மீதும் தாழ்வு மனப்பான்மையை, நுகர்வு கலாச்சாரத்தை, லஞ்சம் வாங்கும் ஆர்வத்தை என பல்வேறு பாதிப்புகளை உருவாக்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, அரசுப் பணிகளில் இருக்கும் ஆண்களும் சீருடை அணிய அரசு உத்தரவிட வேண்டும் என்றும், பல அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் யார், தரகர் யார் என்றறிய முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் சீருடை அணிந்திருக்கும்போது, லஞ்ச, ஊழல் பிரச்சினைகளும் ஓரளவுக்கு கட்டுக்குள் வரலாம் என்றும், எனவே, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சீருடை அணிய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!