இதில் என்ன தவறு இருக்கிறது ?

0 466

 

இதில் என்ன தவறு இருக்கிறது ?

 

எனக்கு தெரிந்த பெண்ணின் தந்தை அவளது, சிறுவயதிலேயே இறந்துவிட்டார். பள்ளி தலைமை ஆசிரியையான அவளது தாய், தனது மூன்று குழந்தைகளை காப்பாற்றவேண்டும் என்பதால், மறுமணம் செய்து கொள்ளவில்லை. அவர்களுக்காகவே வாழ்ந்துவந்தார்.

அவளது அண்ணன் 10 வருடங்களுக்குமுன் விபத்தில் இறந்துவிட்டார். இரு மகள்களுக்கும் திருமணம் செய்துவைத்து வீடுகள் கட்டிக்கொடுத்ததோடு சொத்துக்களையும் பிரித்துக்கொடுத்தார். ஆனால், மகள்களோ அம்மா வாங்கும் பென்ஷன் பணத்தை சுரண்டுவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, சரியாக கவனித்துக்கொள்ளவில்லை. கடந்த வருடம் அம்மாவுக்கு கிட்னி பிரச்சனை. கால் எல்லாம் வீங்கி அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அந்தப்பெண்ணிடம் நான் பேசும்போதெல்லாம் ‘அம்மாவை பார்த்துக்கொள்’ என்பேன். அப்படியும், அவள் தன்னுடன் வைத்திருக்கவில்லை. இதற்கிடையில், சமீபத்தில் அம்மா கீழேவிழுந்து முதுகு தண்டுவடத்தில் அடிபட்டுவிட்டது. அப்போதும் அக்கா, தங்கைகளுக்குள் பென்ஷன் பணப்பிரச்சனைதான். கடந்த மாதம் அம்மா இறந்துவிட்டார். இறந்தபிறகும் அவரின் வங்கிக்கணக்கில் இருந்த சில ஆயிரங்களுக்குத்தான் சண்டை போட்டார்கள்.

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தை ‘இது இன்னும் எத்தனை பண்ணிக்கப்போகுதோ’ என்று பலர் விமர்சிக்கிறார்கள். இப்படி மீம்ஸ்கள் போடுகிறார்கள். வனிதா விஜயகுமார் திருமணத்தை அறிவித்ததும் எனக்கு மேலே குறிப்பிட்ட சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. இரண்டு பெண்குழந்தைகளை தனியொரு மனுஷியாக படிக்கவைத்து ஆளாக்குவது சாதாரணமான விஷயமா? அதுவும், வனிதாவிற்கு குடும்பத்தினர் சப்போர்ட் துளியும் இல்லை. குழந்தைகளை வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பார். அதனை வனிதா விஜயகுமாராக இருந்து பார்த்தால்தான் புரியும். கஷ்டப்படும்போது விமர்சிப்பவர்களா பார்த்துக்கொள்ளப்போகிறீர்கள்?

வனிதாவுக்கு இரண்டு முறையும் வாழ்க்கைத்துணை சரியாக அமைந்திருக்காமல் இருந்திருக்கலாம். மூன்றாவதாக அமைந்த லிவிங் டு கெதரும் அப்படியே அமைந்திருக்கலாம். இப்போது, திருமணம் செய்திருக்கும் பீட்டர் பால் வனிதாவின் அன்பை வென்றிருக்கலாம். இதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு ஆண் நான்கைந்து பெண்களைக்கூட திருமணம் செய்துகொள்கிறார்கள். அதுவே, பெண் செய்தால் மட்டும் கலாச்சார சீர்கேடு? அப்படித்தானே? ஒருவரின் பர்சனல் விஷயத்தை விமர்சிக்கவும் பேசவும் அருவருப்பாக இல்லையா?

முதலில் அமைந்த வாழ்க்கைத்துணை சரியாக அமையவில்லை என்றால் நான்கைந்து அல்ல. பத்தாவது முறைகூட பெண்கள் மறுமணம் செய்துகொள்ளாலாம். தவறே இல்லை <3 குறிப்பாக, குழந்தைகளுக்காவே வாழும் பெண்கள் தன் வாழ்க்கைமீதும் சுயநலம் கொள்ளவேண்டும். சமூகத்திற்காக அஞ்சி, தனது விருப்பங்களையும் கனவுகளையும் குழந்தைகளுக்காகவே தொலைத்து மறுமணம் செய்துகொள்ளாமல் இருந்தால், கடைசியில் அவர்கள்தான், மேலே குறிப்பிட்ட தாய்போல் கஷ்டப்படுவார்கள்.

ஊர் என்ன சொல்லும் என்று கவலைக்கொள்ளாமல், கொரோனாவிலும் 40 வயதில் காதலரை மணம்புரிந்து வாழ்க்கையை அழகாக்கியிருக்கும் வனிதா விஜயகுமாருக்கு பேரன்புகளும் முத்தங்களும்  மனம் நிறைந்த வாழ்த்துகள் !

முகநூலில் வினி

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!