கால்வாயில் உடைப்பு… விளைநிலங்களில் புகுந்த தண்ணீர்…

0 358

 

கால்வாயில் உடைப்பு… விளைநிலங்களில் புகுந்த தண்ணீர்...

கரையை பொதுப்பணித்துறையினர் பலப்படுத்தாததால், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பைங்கால் கிராமத்தில் கல்லணை கால்வாயில் இன்று அதிகாலை உடைப்பு ஏற்பட்டு ஆற்று நீர் விளைநிலங்களில் புகுந்தது.

பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் தற்போது தண்ணீர் வீணாவதைக் கண்டு விவாசயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தற்போது உடைப்பை அடைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்டா பாசனத்திற்காக கடந்த 16-ம் தேதி தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் இன்று அதிகாலை கடைமடை பகுதிக்கு வந்தடைந்தது.

தண்ணீர் வந்தடைந்த முதல் நாளே தஞ்சை மாவட்ட எல்லைக் கிராமமான வேம்பங்குடி அருகே பெரிய உடைப்பு ஏற்பட்டு வயல்வெளியில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தடுப்புக் கம்புகள் அமைத்து மணல், வைக்கோல் வைத்து உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியப்போக்கே இந்த உடைப்புக்கு காரணம் என அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வாய்க்காலின் கரையை பலப்படுத்துங்கள் என மேட்டூரில் ஜுன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பே விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அக் கோரிக்கையை பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளாததே தற்போது உடைப்பு ஏற்படக் காரணம் என்கிறார்கள் விவசாயிகள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தண்ணீரை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்துவந்த நேரத்தில் திடீரென ஏற்பட்ட உடைப்பு காரணமாக தற்போது தண்ணீர் அனைத்தும் வீணாகுவதைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் எந்தவொரு பகுதியிலும் உடைப்பு ஏற்படாதவாறு அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதற்கிடையே, கல்லணை கால்வாயில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தியுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள்;, தற்போது வாய்க்காலில் வரும் தண்ணீர் நின்றவுடன் உடைப்பு சரி செய்யப்பட்டு மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!