திருச்சி இளைஞர்களுக்கு வலை விரிக்கும் சைக்கிள் ஜல்சா !!

0 12,187

திருச்சி இளைஞர்களுக்கு வலை விரிக்கும் சைக்கிள் ஜல்சா !!

திருச்சி கோவில் நகரம் மட்டுமல்லாது சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.

முக்கொம்பு,  கல்லணை, ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா, காவிரி பாலம், என சுற்றுலாத்தலமாக இருந்தாலும் தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளதால் திருச்சி மக்கள் விரும்பி தனது நேரத்தை கழிக்கும் இடமாக காவிரி பாலமும் உய்யகொண்டான் ஜல்லிக்கட்டு ரோடும் தான் இருந்து வருகிறது.

சமீபத்தில் ஜல்லிக்கட்டு ரோடு என்று அனைவராலும் அழைக்கப்படும் கோர்ட் சாலையில் உய்யக்கொண்டான் ஆற்றின் ஓரத்தில் தனியார் அமைப்பினர் நிதி உதவியுடன் நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டது.

அதில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உடற்பயிற்சி செய்வதற்கு உடற்பயிற்சி இயந்திரங்களும் பொருத்தப்பட்டது. கரோனோ ஊரடங்கு காரணமாக இந்த உடற்பயிற்சி கூடம்,  பூட்டி வைக்கப்பட்டுள்ளது .

இருந்தாலும், பொதுமக்கள் காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் அப்பகுதியில் நடைபயிற்சி  செல்வது இயல்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தேவையில்லாத விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக புகார் வசித்தனர் தொடர்ச்சியாக நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள்.

பொதுமக்கள் மாலையில் வாக்கிங் செல்லும் நேரமான 8 மணியிலிருந்து 10 மணிக்குள் ஒரு கும்பல் வாக்கிங் வருவதுபோல் ஆடம்பரமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து வருவதும் அங்கு வாக்கிங் செல்வோர் இடம் பின்னே சென்று “சைக்கிள் வேணுமா சைக்கிள் வேணுமா” என கிசுகிசுப்பான குரலில் கொஞ்சி கொஞ்சி ஜல்சாக்கள் அழைக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் இந்த வார்த்தையின் அர்த்ததை புரிந்து கொண்ட சில இளைஞர்கள் அந்தப் பெண்களுடன் பணம் கொடுத்து விட்டு அவர்கள் கூடவே செல்வது நடந்து வருகிறது. மேலும் இந்த கும்பல் கடந்த சில நாட்களாகவே இந்த ஜல்சா கும்பல் இப்பகுதியில் தொடர்ந்து சுற்றுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி இளைஞர்களின் தன்னம்பிக்கையின் அடையாளமாக  இந்த சாலைக்கு ஜல்லிக்கட்டு சாலை என்று ஒரு புகழ்பெற்ற பெயர் இருந்து வருகிறது . இந்த ஜல்சா சைக்கிள் கும்பலின் வலையில்  சில இளைஞர்கள் விழுவதால் அந்த சாலையின் நற்பெயரும் கெட்டுப் போவதாக பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!