13 வயது சிறுவன் இறப்புக்கு காரணம் என்ன ?

0 599

13 வயது சிறுவன் இறப்புக்கு காரணம் என்ன ?

 

கரோனா தொற்று உறுதியான 13 வயது சிறுவன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுமார் 13 மணி நேரத்தில்  மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

 

ஆஸ்த்மா மற்றும் நுரையீரல் பிரச்சினை காரணமாக அச்சிறுவன் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தஞ்சாவூர் அண்ணாநகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான அச்சிறுவன் தசை இணைப்பு திசு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஜுன் 24-ம் தேதி உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. ஜுன் 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் வெளிவந்த பரிசோதனை முடிவில் அச்சிறுவனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

 

இதையடுத்து, அச் சிறுவன் KG மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு காலை 9 மணிஅளவில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

 

எனினும், அச் சிறுவன் அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரவு 11 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!