இந்தக் காரியத்தை யார் செய்திருப்பார் !

0 580

திருச்சி ஐயப்பன் கோவிலரு்கே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் ஜவுளிக்கடை குப்பைகளைக் கொட்டியுள்ளனர்.

அங்கே உள்ள ராம்ஸ் மாரிஸ் அடுக்கு மாடிகுடியிருப்பில் ஜவுளிக்கடை உள்ள நிலையில் இந்தக் காரியத்தை யார்

செய்திருப்பார் என்பது கண்கூடு.

 

ஊருக்குள் ஓடும் வாய்க்காலையும் சாக்கடையாகவும், குப்பைத் தொட்டியாகவும் மாற்றும் இந்த வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கலாமே.

அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் நீரையும் காற்றையும் மிச்சம் வைக்க வேண்டாமா  என்கிற ஆதங்கத்துடன் இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.சி. பழனிசாமி, மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் முதல் அனைத்து அதிகாரிகளிடம் புகார் சொல்லியும் நடவடிக்கை எதுவும் எடுக்காததால்…

விரத்தியில் நானே

அந்த குப்பைகளை அகற்றும் வரை இங்கிருந்து நகர்வதில்லை என்கிற முடிவுவோடு அந்த வணிக வளாகத்தின் வாயில் அற வழியில் அமர்ந்திருக்கிறேன். வணிக வளாகமும் அதிகாரிகளும் என்ன  செய்கிறார்கள் பார்க்கிறேன்.

 

என்னுடைய தொடர் போராட்டத்திற்கு பிறகு மாநகராட்சி அதிகாரிகள் வந்து அந்த கடைக்காரர்களை வைத்தே பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தினார்கள்.

ஷானு,

Leave A Reply

Your email address will not be published.