தனியார் சுய நிதி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பரிதாப நிலை !

0 296

 

தனியார் சுய நிதி கல்லூரிகளில் பெரும்பாலான பேராசிரியர்களின் மாத ஊதியங்கள் 10,000/_ க்கும் கீழே நிர்வாகத்தினரால் வழங்கப்படுகிறது அதுவும் வழங்காமல் இழுத்தடிக்கும் சூழல்களும் அரங்கேறிய வண்ணம் உள்ளது மேலும் இந்த கொரானா காலங்களில் மாத ஊதியங்கள் பேராசிரியர்கள் கேட்கும் பட்சத்தில் கல்லூரி நிர்வாகங்கள் பேராசிரியர்களின் பெயரில் வங்கியில் தனி நபர் கடன்கள் லட்சக்கணக்கில் வாங்கி நிர்வாகத்திற்கு வழங்க நிர்பந்திக்கப்படுகிறார்கள் மறுக்கும் பட்சத்தில்  பேராசிரியர்களை ஏதாவது ஒரு காரணம் காட்டி பணி நீக்கம் செய்வதாகவும் மிரட்டுகிறார்கள்…..

நாம் படித்தது என்னவோ உயர் கல்வி சமூகத்தில் ஆனால் நாம் பெறுகின்ற ஊதியங்களோ….

இன்று கல்வியில் உச்ச பட்ச பட்டமான முனைவர் பட்டம் முடித்தவர்களுக்கு ஒரு நாள் கூலி 500 ரூபாய் போதுமானதா ?

அது தான் யூஜிசி நிர்ணயம் செய்த சம்பளமா? ! இது அநீதி என்று ஆட்சியாளர்களுக்கும் தெரியவில்லையா?

  1. கொத்தனார் ஒரு நாள் சம்பளம் 800
  2. நிமிர்ந்த ஆள் ஒரு நாள் சம்பளம் 800
  3. சித்தாள் ஒரு நாள் சம்பளம் 500
  4. ஆசாரி ஒரு நாள் சம்பளம் 800
  5. பிளம்பர் ஒரு நாள் சம்பளம் 800
  6. டைல்ஸ் ஓட்டுபவர் ஒரு நாள் சம்பளம் 1000 – 1200
  7. ஆட்டோ ஓட்டுபவர் ஒரு நாள் சம்பளம் செலவீனங்கள் போக 1000
  8. எலக்டீரிசியன் ஒரு நாள் சம்பளம் 700
  9. பைக் மெக்கானிக் ஒரு நாள் சம்பளம் 1500 – 2000
  10. முறுக்கு தொழில் ஒரு நாள் வருமானம் 2000

இவைகள் அனைத்திற்கும் மழைக்கு கூட கல்வி நிறுவனம் பக்கம் ஒதுங்க அவசியம் இல்லை…

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்ற யவை.

என்ற வள்ளுவருடைய குறள் இன்று பொய்யாக அமைய வைத்தது சுயநிதி பேராசிரியர்களின் பெரும்பாலனோரின் வாழ்வாதார  நிலை துறவறசபையினர்நடத்தும் கல்வி நிறுவனங்கள் தவிர பெரும்பாலான நிறுவனங்கள் மாத ஊதியங்கள் வழங்கவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

உயர்நீதிமன்றமும் நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை மாத ஊதியத்தை வைப்பு நிதியிலிருந்து வழங்க நீதிபதிகள் கூறிபோதும், நிர்வாகங்கள் அதனை ஏற்று நடக்கவில்லை.

இதுபற்றி பேராசிரியர்கள் தரப்பில் கூறப்படுவது,

நாங்கள் இலவசமாக முனைவர் பட்டம் வரை பயின்று இருந்தால் சம்பளமே கேட்காமல் சேவை செய்வோம்.

ஆனால் விளை நிலங்களை விற்று  கல்விக்காக கொடுத்த பணத்தில் படித்து வளர்ந்த நாங்கள் இன்று தாய் தந்தையர்களின் மருத்துவத்திற்காக கூட உதவ முடியாத நிலையில் உள்ளோம்.

காரணம் யார் ?   நம் கல்விக்காக, இன்று தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் மருத்துவ  கட்டணத்திற்கு தங்களின் சிறுநீரகத்தை விற்பனை செய்வதை விட வழி தெரியாத நிலையில் பெற்றோர்கள் உள்ளனர்.

உயிரை எடுப்பது மட்டும் தீவிரவாதம் கிடையாது, வாழும் உரிமையை தர  மறுப்பதும் பயங்கரவாதமே.

சரி ஆசிரியர்களாகிய எங்களின் திறமையால்தான் தங்களின் நிறுவனங்கள் வெளி உலகிற்கு அடையாளம் காணப்பட்டன.

அதற்கு கல்வி நிறுவன நிர்வாகம் காட்டிய பெருமிதம் தான் பணம் இல்லை என்று.

இந்த உலகில்  எப்படி இவ்வளவு பெரிய பொய்யினை நம்புவது ??  நிறுவனத்தார் நினைத்தால் தங்களுக்காக உழைத்த பேராசிரியர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தலாம்…

மாத ஊதியங்களையும் உயர்த்தலாம்…..

தனியார் சுய உதவி பேராசிரியர்களும் அரசு வேலைக்கு செல்லும் என்ற மன நிலை வராமல் தங்களது அதாவது நமது கல்லூரி நிறுவனம் என்ற ஒரு உயரிய சிந்தனையோடு செயல்படுவார்கள்…

இதுவரை இந்த மன நிலையில் தான் உழைத்துக்கொண்டிருந்தோம்  ஆனால் இந்த கொடிய நோய் காலங்களில் எங்களுடைய சிந்தனையில் சிறிய மாற்றம் உருவாகிற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நிறுவனங்கள் தங்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் பேராசிரியர்களின் வாழ்வாதாரங்களை மீட்டு எடுக்க வேண்டுமென தாழ்மையான கோரிக்கையினை முன் வைக்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!