திருச்சியில் கஞ்சா போதையில் பட்டா கத்தியுடன் திரிந்த வாலிபர்களால் பரபரப்பு

திருச்சி காந்தி மார்க்கெட் உப்பு பாறை அடுத்து பிள்ளைமார் நகரை சேர்ந்த ஜாக்கி என்கின்ற ஜாக்கிஜான் வயது 27 மற்றும் அவரது சகோதரர் பாரு ஜான் வயது 25 ஆகிய இருவரும் நேற்று மாலை பிள்ளைமார் நகரில் கஞ்சா போதையுடன் ரோட்டில் சென்றவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அடிதடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர் இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர்களை கண்டிகையில் அவர்கள் கத்தியால் குத்த வந்ததுடன் தனது கைகளையும் கிழித்துக்கொண்டு மிரட்டியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பிள்ளைமார் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்களுடன் கைகலப்பு ஏற்பட்டு ஜாக்கி என்கின்ற ஜாக்கிஜான் அவரது சகோதரர் பாரு ஜான் மற்றும் காதர்பாட்சா ஆகியோருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்ட காரணத்தினால் அவர்களை 108 உதவியுடன் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கொண்டு அனுமதிக்கப்பட்டனர். மேலும் இது தொடர்பாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.