திருச்சியில் கரோனா நேரத்திலும் கொள்ளை- போலீசார் அட்ராசிட்டி... திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கரோனா காலத்திலும் சிறு சாப்பாடு கடைகளும் பெட்டிகளிலும் இயங்கி வந்து கொண்டிருக்கின்றது. இந்த வகையில்  29.06.2020 இரவு நம்மிடம் பேசிய சில ரோட்டு கடை, சிறு கடை உரிமையாளர்கள் கூறியதாவது... கரோனா காலங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் எங்களுடைய தொழில் பெரிதும் நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடை போட்டால் எங்களுக்கு 300 ரூபாய் கிடைப்பதே பெரிய விஷயமாய் இருந்து வருகிறது. போட்ட முதலீடுகளை எடுப்பது என்பது பெரிய கஷ்டமாக இருந்துவருகிறது. அந்த வகையில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்கள் ஒரு நாளைக்கு ஆறு பேர் வந்து 20 ரூபாய் வசூலித்து செல்கின்றனர். கடை ஓட்டம் ஓடினாலும் ஓடாமல் இருந்தாலும் இவர்களுக்கு கப்பம் கட்டுவது என்பது கட்டாயமாக இருந்து வருகிறது. மேலும் ஒரு சில காவலர்கள் கடைக்கு வந்து பணம் பெற்று செல்வதுடன் 100 ரூபாய்க்கும் மேலாக சாப்பிட்டுவிட்டு பார்சலும் கட்டிக்கொண்டு அதற்கான பணத்தை செலுத்தாமல் செல்கின்றனர். இதில் அவர்கள் கேட்ட தொகையை அப்படி கட்ட தவறினால் கடையை போட அனுமதிக்க மறுக்கின்றனர். இதில் மாதமாதம் பெட்டி கேஸ் போடுகின்றனர்... ஒரு பக்கம் கரோனா எங்களை கொன்று கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இதுபோன்ற அரசு அதிகாரிகளும் லஞ்சம் கேட்டு எங்களை உயிரோடு கொன்று வருகின்றனர் என்று புலம்பினார்...