சுருக்கமாக ஈ.எம்.ஐ என்று அழைக்கப்படும் சரிசம மாதாந்திர தவணை முறையில், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்டஅளவு பணத்தை வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு உங்கள் கடன் தொகையை முழுமையாகக் கட்டி முடிக்கும் வரைசெலுத்த வேண்டும். நீங்கள் திருப்பி செலுத்த வேண்டிய அசல் தொகையுடன் வட்டியும் சேர்த்தே இந்த ஈஎம்ஐ மூலம்வசூலிக்கப்படும். அசல் மற்றும் வட்டியைச் சேர்த்து உங்களுக்கு விருப்பமான கால அளவிற்கு ஏற்ப சரிசமமாகபிரிக்கப்படும். எவ்வளவு மாதங்கள் என தேர்வு செய்து பிரிக்கிறீர்களோ, அவ்வளவு மாதம் பணத்தை தொடர்ந்து திரும்பசெலுத்த வேண்டும். துவக்கத்தில் வட்டித் தொகை அதிகமாக இருந்தாலும், பணம் செலுத்த செலுத்தக் குறைந்துகொண்டே வரும். வட்டி விகிதத்தை பொறுத்து அசல் தொகையின் மீது எவ்வளவு சதவீதம் வட்டி என நிர்ணயிக்கப்படும். மாதாந்திர தவணைத் தொகையில் மாற்றம் இல்லாமல் இருந்தாலும், அசல் மற்றும் வட்டி பிரிவுகளில் கால அளவைப்பொறுத்து மாற்றங்கள் இருக்கும். ஒவ்வொரு அடுத்த தவணைத் தொகையிலும், அசல் தொகை அதிகரிக்கும் மற்றும்வட்டி குறையும்.