கடல் கடந்து வந்த கொலைகாரியின் காதல் பாதை !   தனது காதல் கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த அசீலா இலங்கையில் பிறந்தவர்.   இலங்கை அம்பாறை மாவட்டம் சாமந்துறை அஞ்சல் மலையடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை அஹமது லெப்பை. தாய் அவ்வா உம்மா. தற்போது 37 வயதாகும் அசீலா 1983-ம் ஆண்டு ஜுன் 5-ம் தேதி பிறந்தார். பள்ளிப்  படிப்பை முடித்துள்ள அசீலா 1999-ம் ஆண்டு தனது 16வது வயதில் குவைத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்துகொண்டிருந்த போது அவருக்கும் அதே வீட்டில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த யூசுப்-க்கும் காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் இலங்கைக்கு திரும்பி 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து, அவர்கள் இருவரும் மீண்டும் குவைத்துக்கு வேலைக்கு சென்றனர். இம்முறை யூசுப் குவைத்தில் உள்ள ஒரு ‘ஷாப்பிங் மால்’-ல் சேல்ஸ்மேன் ஆக வேலைக்கு சேர்ந்தார்.   ‘பியூட்டிசியன்’ ஆக வேலை பார்த்துள்ளார் அசீலா.   2004 முதல் 2008 வரை இருவரும் குவைத்தில் பணிபுரிந்துள்ளனர். அதன் பின்னர், தஞ்சாவூரில் காயிதே மில்லத் நகரில் சொந்தமாக வீடு வாங்கி அதில் அசீலாவை குடியிருக்க வைத்துவிட்டு யூசும் மீண்டும் குவைத் சென்றுவிட்டார். அப்போது அந்த வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்த சகாயம் என்பவருடன் அசீலாவுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. (தற்போது யூசுப் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கொலையாளிகள் 2 பேரில் அவரும் ஒருவர் ஆவார்).   குவைத்திலிருந்து அவ்வப்போது வந்து சென்ற யூசுப்  அவரது பெயரில்  தஞ்சாவூர் மட்டும் புதுக்கோட்டை பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியுள்ளார்.  இந்நிலையில், அசீலாவின் ‘நண்பர்கள்’ வட்டாரம் பற்றி அறிந்த யூசுப் இதுபற்றி கேட்டுள்ளார். அதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.  என்கின்றனர் இதுபற்றிய விபரமறிந்தவர்கள்.   தஞ்சாவூர் விளார் ரோட்டில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் மேனேஜருடன் சேர்ந்து அவ் வங்கி லாக்கரில் யூசுப் வைத்திருந்த நகைகள் மற்றும் ஆவணங்களை திருடிய வழக்கில் அசீலா 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.   இதுபோக, கடந்த 2009ம் ஆண்டு ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த  மேரி என்பவரது பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு செல்ல முயன்றபோது அசீலா கைது செய்யப்பட்டார்.   அதுமட்டுமின்றி, திருச்சியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவரின் ‘பிடி’யில் அசீலா தற்போது இருந்து வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாகவே, திருச்சி கே.கே.நகர் ஏரியாவில்  சொந்த வீடு இருந்தும் அதில் குடியிருக்காமல் திருச்சி கண்டோன்மெண்ட் ஏரியாவில் உள்ள அந்த வழக்கறிஞரின் முகவரியை தனது முகவரியாக ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ளார்.   திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் முறைப்படி இந்தியன் சிட்டிஜன்சிப் பெறவில்லை. அதேபோல, இந்தியரை மணந்திருப்பதால் இந்தியாவில் நீண்ட காலம் தங்குவதற்கான விசாவை பெற்றிருக்கலாம். ஆனால், அந்த விசாவையும் அவர் பெறவில்லை. அதன்படி, அவர் உரிய அனுமதி இன்றி இத்தனை ஆண்டுகள் ‘இல்லீகல்’ ஆக இந்தியாவில் தங்கியுள்ளார் இது குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கின்றனர் இதுபற்றி விபரமறிந்தோர்.   இவரது பெற்றோர்க்கு இவரைச் சேர்த்து மொத்தம் 5 பிள்ளைகள். இவர் நான்காவது பிள்ளை. இவருக்கு 2 அக்கா, ஒரு அண்ணன், ஒரு தம்பி உள்ளனர்.   அசீலாவை அவருக்கு நெருக்கமானவர்கள் ரம்ஜியா என்றே அழைக்கின்றனர். ‘ரம்ஜியா’ என்ற அரபு வார்த்தைக்கு ‘அமைதியானவள்’ என அர்த்தம் ஆகும்.   அசீலாவுக்கு யூனுஸ் (வயது 13) என்ற மகனும், அமீரா (வயது 12) என்ற மகளும் உள்ளனர்.