அயோத்தி பூமிபூஜைக்கு அனுப்பப்படும் மகாமகக்குள புனித தீர்த்தம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சிக்கு கும்பகோணம் மகாமகக்; குளக்கரையிலிருந்து புனித தீர்த்தம் அனுப்பப்படுகிறது. பூமிபூஜைக்கு மகாமகக் குளக்கரையிலிருந்து புனித தீர்த்தம் பூஜை செய்து அனுப்பபும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. அனைத்து இந்து இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மகாமகக்குளம் வடகரையில் மூன்று கலசங்களில் புனித தீர்த்தம் எடுத்து பூஜைகள் செய்யப்பட்டன. பூஜைகள் செய்யப்பட்ட தீர்த்தமானது நாளை (ஜுலை 31) கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் பார்சல் மூலமாக அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் பூமிபூஜைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், பாஜக நகர தலைவர் சோழராஜன், அகில பாரத இந்து மகா சபா (ஆலய பாதுகாப்பு பிரிவு) மாநில தவைலர் இராம நிரஞ்சன், சிவசேனா மாவட்ட பொதுச் செயலாளர் குட்டி சிவக்குமார், விஸ்வ இந்து பரிஷத் நகர தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.