‘இரும்புத்திரை’ என்ற தமிழத் திரைப்படத்தில் காட்டப்டுவதுபோல, மர்ம கும்பல் ஒன்று திருச்சியில் உள்ள ‘ஸ்டேட் பேங்க’;  ATM களை ஹேக் செய்து தஞ்சை மாவட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து பல லட்ச ரூபாயை திருடியுள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக பதிலளிப்பதாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் வசிக்கும் ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் சிலருக்கு பணம் பரிவர்த்தனை செய்ததுபோல சில தினங்களுக்கு முன்னர் தொடர்ந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ந்துபோன வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று இதுபற்றி தெரிவித்துள்ளனர். அதற்கு வங்கி அதிகாரிகள்;, ‘நீங்கள் தான் பணம் எடுத்துள்ளீர்கள்’ எனக்கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ரயில் நகரைச் சேர்ந்தவர் அப்துல் முகம்மது அயூப் (51). மரைன் இன்ஜினியரான அயூப் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கைந்து மாதங்களாக தஞ்சாவூரில் இருந்து வருகிறார். இந்நிலையில் ஜுலை 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7.27 முதல் 7.30 மணிக்;குள் தொடர்ந்து 4 முறை தலா ரூ10,000 வீதம் மொத்தம் ரூ40,000 அவரது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது ஏடிஎம் கார்டை ‘பிளாக்’ செய்துவிட்டு, திங்கள்கிழமையன்று ஸ்டேட் பேங்க் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். அதனால்;, அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துமனை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் அவரது புகாரை பெற்றுக்கொள்ள போலீஸார் மறுத்துவிட்டனர். வெறுத்துப்போன் அவர், ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்திலிருந்து அவரை தொடர்பு கொண்ட போலீஸார், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் செய்யுமாறு கூறி அனுப்பிவிட்டனர். “வழக்கமாக நமது வங்கி கணக்கிலிருந்து வேறு எவராவது ஹேக் செய்து பணம் எடுத்தால், நமக்கு ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ என்ற ழுவுP நம்பர் வரும். ஆனால் எனக்கு அதுபோல ஓடிபி நம்பர் எதுவும் வரவில்லை. அந்த அளவுக்கு தொழில் நேர்த்தியுடன் பணத்தை திருடியுள்ளது அக்கும்பல்,” என்கிறார் அயூப். இவரைப்போல பாதிக்கப்பட்ட பாலசுந்தரம் (55) தஞ்சையில் பொதுப்பணித்துறை திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வங்கிக் கணக்கிலிருந்து ஜுலை 13-ம் தேதி ரூ30,000 திருடப்பட்டுள்ளது. அதேபோல, கோவிந்தராஜ் என்பவரின் கணக்கிலிருந்து ரூ50,000 திருடப்பட்டுள்ளது. இவர் வேறு யாருமல்ல, ஸ்டேட் பேங்க்-ன் ஓய்வுபெற்ற மேனேஜர் ஆவார். திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மற்றும் என்ஆர்ஐ ஏடிஎம் ஆகியவற்றிலிருந்து நூதன முறையில் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தற்போது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 6 நபர்களிடமிருந்து சுமார் ரூ2.5 லட்சம் திருடப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளதாகவும், அவர்களது புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்து, சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர். ஏற்கெனவே தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் ஒரு மர்ம கும்பல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான இந்தியன் வங்கி, கனரா வங்கி ஆகிய இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ5.20 கோடி திருடியுள்ள நிலையில், தற்போது தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களின் பணத்தை மர்ம கும்பல் திருடியுள்ளது டெல்டா மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.