1.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி மத்திய மண்டல செயலா ளர் பொறுப்பிற்கு மாற உள்ள நிலையில் அவரின் கிழக்கு மா.செ. பதவி க்கு யாருக்கு என்ற போட்டியில் முன்னாள் ச.ம.உ. கே.என்.சேகரனும், மேயர் வேட்பாளராக விரும்பும் பகுதி செயலாளர் மதிவாணனும் முன்னணியில் உள்ளனராம்.
2.
“ஆட்சியிலிருக்கும் மமதையில் அப்பாவையே மோசமாக பேசி மறைந்த அந்தம்மாவின் குட்லிஸ்டில் பெயர் பெற்று மந்திரியானவர் விஜய பாஸ்கர். அவர் மேல் ஏகப்பட்ட ஊழல் புகார்கள் உள்ளது. அவரை ஏன் இன்னும் வெளியே நடமாடவிடுகிறீர்கள். முதலில் அவரை கைது செய்யுங்கள்” என எரிச்சலுடன் தலைமைக்கு பிரஸர் கொடுக்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமான உ.பி.க்கள்.
3.
அதிமுக ஆட்சியின் போதே மு.க.ஸ்டாலினுடன் திருமண மேடையில் போஸ் கொடுத்து நெருக்கம் காட்டியது மணல் மாஃபியா எஸ்.ஆர். குரூப். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரு பெரிய ‘ஸ்வீட் பாக்ஸை’ கொடுத்து மீண்டும் தங்களுக்கு மணல் குவாரி வேண்டும் என ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். ஆனால் முதல்வரின் நெருக்கமான ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளோ, “வேண்டாம் கெட்ட பெயராகிவிடும் என அட்வைஸ் செய்ததால், ‘அரசே மணல் குவாரியை எடுத்து நடத்தும்’ என அறிவிப்பு வெளியானது. இதனால் டென்ஷனான எஸ்.ஆர். தரப்பு, சம்பந்தப்பட்ட மந்திரியிடம், கூடுதல் ஸ்வீட்பாக்ஸ் கொடுத்து, “அட்லீஸ்ட், ஆற்றிலிருந்து மணலை அள்ளி ஒரிடத்தில் குவிக்கும் காண்ட்ராக்டை கெஞ்சி வாங்கிட்டாங்களாம்”.