அங்குசம் சேனலில் இணைய

”108 ஆம்புலன்ஸ்” நாம் அவரை கேள்வி கேட்கலாமா! -Dr. கு. அரவிந்தன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாகவும் அவசரமாகவோ செல்ல வேண்டுமென்றால் அதற்குள் நோயாளி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.. ஏனென்றால் அவசரமாக ஒரு நோயாளியை கூப்பிடச் செல்கிறது என்றால் அந்த ஆம்புலன்ஸ் உள்ளே நோயாளி யாரேனும் இருப்பாரா?? இல்லையா?? நோயாளியை கூப்பிடுவதற்கும் ஆம்புலன்ஸ் வேகமாக தானே செல்ல வேண்டும் 🙄 சரி நான் பதிவுக்கு வருகிறேன். இந்தப் பதிவு ஆம்புலன்ஸ் சிஸ்டம் எவ்வாறு இயங்குகிறது என்பதன் விழிப்புணர்வு பதிவே.

நமது தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் நடத்துவது GVK எனும் ஒரு குழுமம், இப்போது அது EMRI GREEN HEALTH Services என்று அழைக்கப்படுகிறது.. நாம் 108 எண்னை அழைக்கும் பொழுது, சென்னையில் இருக்கும் அதனுடைய தலைமை அலுவலகத்திற்கு cal செல்லும், அங்கு உள்ள சேவை அதிகாரி உங்களிடம் நோயாளியின் விவரம், விபத்து என்றால் விபத்தின் விபரம், எந்த இடம், எத்தனை தூரம் எங்கிருந்து உள்ளது, ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது என்றால் அதற்கான விபரம் என அனைத்தையும் துரிதமாக கேட்டு தெரிந்து கொள்வார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

வாகன பழுது, போதிய கருவிகள் இல்லை என புகார்: 108 ஆம்புலன்ஸ்களை ஆய்வு செய்ய குழு | 108 ambulance issue - hindutamil.inபொதுவாக ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் இத்தனை 108 ஆம்புலன்ஸ் என்று கணக்கு இருக்கும், அதற்கு இத்தனை வாகன ஓட்டிகள், மற்றும் EMT என அழைக்கப்படும் செவிலியர்கள் இருப்பார்கள்.. மாவட்டத்தில் ஒரு ஒரு ஆம்புலன்ஸ்க்கும் நிற்க ஒரு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும், அந்த இடத்தில் தான் அது நிற்க வேண்டும்.. ஏனென்றால் சென்னைக்கு செல்லும் அந்த cal மூலம், எந்த இடம் என்று தெரிந்து கொண்டு அருகாமையில் இருக்கும் அந்த ஆம்புலன்ஸ் எது என அறிந்து, அந்த EMT க்கு அந்த மாவட்ட 108 ஆம்புலன்ஸ் அதிகாரி மூலம் கால் செய்வார்.

அவ்வாறு இருக்க மாவட்டந்தோறும் ஆங்காங்கே ஒரு இடத்தில் பிரத்தியேகமாக ஆம்புலன்ஸ் நின்று கொண்டு இருந்தால் தான் அதை தொடர்பு கொண்டு உடனடியாக அருகாமையில் தேவைப்படும் இடத்திற்கு செல்ல அறிவுறுத்த இயலும். ஆக ஒரு 108 ஆம்புலன்ஸ் ஒரு நோயாளியை ஏற்றி மருத்துவமனையில் இறக்கிவிட்ட பின்பு அதனுடைய இருப்பிடத்திற்கு வேக வேகமாக செல்ல வேண்டும்.. அப்போதுதான் அடுத்த நோயாளிக்காக ஒரு கால் வரும் பொழுது அது தயார் நிலையில் இருக்கும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Dr. கு. அரவிந்தன்
Dr. கு. அரவிந்தன்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இதை தான் நாம் Response time என்று சொல்லுவோம், அதாவது ஒரு கால் வந்த பிறகு அந்த இடத்திற்கு எத்தனை நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சென்றது அவரை ஏற்றுக் கொண்டு எத்தனை நிமிடத்தில் மருத்துவமனை சென்று அடைந்தது இதுதான் Response டைம்.  அகில இந்திய அளவில் மிகக் குறுகிய ரெஸ்பான்ஸ் டைம் உள்ள மாநிலம் தமிழகம். ஏனென்றால் EMT செவிலியர்கள் மற்றும் 108 ஓட்டும் Pilot கள் மற்றும் சேவை அதிகாரிகள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் போலவே பம்பரமாய் சுத்தி கொண்டு வேலை செய்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும் பலவேறு அழைப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும்..

அப்படி இருக்க தமிழக முழுவதும் தினமும் ஆம்புலன்ஸ் அங்கும் இங்கும் சென்று கொண்டு தான் இருக்கும்.. நோயாளியை ஏற்ற செல்லும் போது காலியாக போகும், ஏற்றுக்கொண்டு வரும்போது நோயாளியுடன் வரும்..

Ambulance Service - Best Super Speciality Hospital in Goaஅதேபோல் நோயாளி கூப்பிட செல்லும் பொழுது பிரத்தியேகமான சவுண்ட் லைட் எரியும், ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது அதற்கு ஏற்றார் போல் சவுண்ட்  லைட் எரியும்..

அவ்வாறு இருக்க காலியாக போகும்போதும் சரி, நோயாளியுடன் வரும்போதும் சரி ஆம்புலன்ஸ் என்றால் வழி விட தானே வேண்டும்.. நீ ஏன் இங்க காலியா போற நீ ஏன் அங்க காலியா போற என்று நாம் அவரை கேள்வி கேட்க முடியுமா.. நான் ஒரு மருத்துவராய் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் படும் இன்னலை பக்கத்தில் இருந்து பார்ப்பவன்.. மாடு மாதிரி உழைக்கிறார்கள் என்று ஒருவரை சொல்ல வேண்டுமென்றால் விவசாயிக்கு அப்புறம் 108 அவர்களை நாம் சொல்லலாம் .

ஆக ஒரு மனிதனாக ஆம்புலன்ஸ் காலியாக இருந்தாலும் சரி நோயாளியுடன் சென்றாலும் சரி வழி விட வேண்டியது நமது கடமை.

 

 — Dr. கு. அரவிந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.