14 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் ! தட்டி கேட்ட தாய் மீது தாக்குதல் !
தேனி மாவட்டம் போடி தாலுகா, கரட்டு பட்டியை சேர்ந்த சிந்தாள் மனைவி எத்துலு அம்மாள். இவர்களுக்கு பெரியபாண்டி, சின்னப்பாண்டி, பாண்டீஸ்வரி (14), ஜக்கம்மாள் நான்கு பிள்ளைகள் உள்ளது. இந்நிலையில் எத்துலு அம்மாள் மகள் பாண்டீஸ்வரி திருமண வயதை அடையாத 14 வயது சிறுமியை தேவராஜ் (49) என்பவர் சிறுமியை ஏமாற்றி திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று வழுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் திருமணம் செய்துள்ளார்.

மேலும், பாண்டீஸ்வரி வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகை, கொலுசு, உள்ளிட்டவைகளை ஏமாற்றி திருடி வரச்சொல்லி தேவராஜ் பெற்றோர் துணையோடு திருமண வயது அடையாத சிறுமியை திருமணம் செய்து வீட்டில் வைத்துள்ளார்கள்.
இது குறித்து தன்னுடைய மகளை தன்னுடன் அனுப்பும்படி கேட்ட எத்துலு அம்மாள், மகன் சின்னப்பாண்டி இருவரையும் தேவராஜ், சுருளியாண்டி, ஜக்கம்மாள், ரவி உள்ளிட்டவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதில் படுகாயம் அடைந்த தாய் மற்றும் மகன் போடி தாலுகா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் போடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் உள்ளிட்டவர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
— ஜெய்ஸ்ரீராம்.