தேனி – குத்தகை நிலத்தை பட்டா போட்டு 2 கோடி மோசடி !
குத்தகைக்கு விட்ட நிலத்தை போலி பட்டா போட்டு 2 கோடி மோசடி செய்த இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தேனி மாவட்டம், அரண்மனை புதூரில் உள்ள சர்வே எண் 15/1 சுமார் 5 ஏக்கர் 36 சென்ட் நிலம் அரண்மனை புதூர் கிழக்குத் தெருவில் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் லேட் சடையாண்டி என்பவருடைய பெயரில் பட்டா உள்ளது.
இந்த நிலத்தை அரண்மனை புதூரில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராஜசேகரன் மகன் உதயராஜா மற்றும் ராஜசேகர் தம்பி ரவி இருவரும் சேர்ந்து மேற்படி நிலத்திற்கு சம்பந்தமில்லாத 15ஏ என்ற ஒரு மோசடியான ஆவணத்தை உற்பத்தி செய்து மேற்படி 15/1 ஐ சப் டிவிஷன் செய்ததாக காட்டி மோசடியாக பட்டா பெற்றுள்ளார்கள்.
ஆக இந்த பட்டா மாறுதல் செய்யப்பட்டதற்கான ஆர்டிஆர் பைல் தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் காணாமல் போய்விட்டது
அதே போல 15 Aஎன்ற சர்வே நம்பர் ரயில்வே டிரேக் ஒட்டி உள்ள பகுதிகளை குறிக்கக்கூடிய ஒரு நிலம் என சொல்லப்படுகிறது.
ஆக கொடுவிலார்பட்டி கிராமத்தில் இந்த 15 A என்ற சர்வே நம்பரோ – நிலமோ இல்லை, என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும் மாவட்ட எஸ்பி அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பழனி செட்டிப்பட்டி காவல் நிலையத்தில், போலியாக பட்டா போட்டு கொடுத்த தாசில்தார் உள்ளிட்டவர்கள் நடவடிக்கை எடுக்க விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மோசடி நபர்கள் பண பலம் ஆள் பலம் மிக்கவர்கள் என்பதால் சட்டத்தை தன் பக்கம் வளைத்து மோசடியில் ஈடுபட்டு கடந்த 35 ஆண்டுகால தொடர்ச்சியான விவசாயம் செய்து மகசூலை எடுத்துக்கொண்டு குத்தகைக்கு விட்ட நிலத்தை போலி பட்டா போட்டு 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.
மோசடி செய்து ஏமாற்றி வரும் 2 பேர் மீது உரிய நடவடிக்கை கோரி மேற்படி நிலத்தின் உரிமையாளரான சடையாண்டி மகன் முருகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் சம்பந்தமாக காவல் நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
— ஜெய்ஸ்ரீராம்.