ட்ராவிட் உலக கோப்பையை வாங்கி அதை வானுயர்த்தி செய்த வெறிக்கூச்சலை பாருங்கள் – ஏன் தெரியுமா ?

0
Gary Kirsten moment for Dravid.. – 2011ல் இந்தியா கோப்பையை ஜெயித்ததும் ஒரு ஜோக் உலவியது, அது – கோப்பையை வென்ற ஒரே தென்னாபிரிக்கன் யார்? அது கேரி கிர்ஸ்டன் என்பார்கள். கேரி கிர்ஸ்டன் தென்னாப்ரிக்காவின் கிரேட்களுள் ஒருவர் என எளிதில் சொல்லிவிடலாம்.
அவர் இருந்த பலமான தென்னாப்பிரிக்க அணி 1996 உலக கோப்பையில் காலிறுதி நாக்கவுட்டில் சோக் ஆனது, 1999ல் மறுபடியும் அரையிறுதி நாக்கவுட்டில் சோக் ஆனது, இந்த இரு கோப்பைகளிலும் தென்னாப்பிரிக்கா ஆடிய விதத்தில் அவர்கள்தான் சாம்பியன் என பலரும் நினைத்தனர், ஆனால் நெருக்கமாக வந்து சோக் ஆனார்கள், அதிலும் 1999ஐ இன்னும் அவர்களால் மறக்க முடியவில்லை.

2003 அணியிலும் கேரி இருந்தார், அதில் மொத்தமாகவே சுமாராக ஆடி வெளியேறினார்கள். கேரி கிர்ஸ்டன் 2011ல் உலக கோப்பையை கோச்சாக கையில் ஏந்திய போது எப்படி இருந்திருக்கும்? இன்று அதே நிமிடத்தை, அதே உணர்வை அடைந்திருப்பார் ராகுல் ட்ராவிட். 1999 உலகக்கோப்பையில் ட்ராவிட்தான் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மென், ஆனால் கோப்பை கிடைக்கவில்லை.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்
2003ல் மிகப்பிரமாதமாக ஆடிய இந்திய அணியின் முக்கிய தூனாக ட்ராவிட் இருந்தார், 8 மேட்ச்கள் தொடர்ந்து ஜெயித்து ஃபைனலில் போய் அநியாயமாக ஆஸ்திரேலியாவிடம் சோக் ஆனார்கள். 2007 ஒண்டே உலகக்கோப்பைக்கு ட்ராவிட்தான் கேப்டன், பேப்பரில் பிரமாதமான அணியாக தெரிந்தவர்கள் முதல் ரௌண்டில் நாகினி வங்காளதேசத்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தனர். அந்த ஒரே ஒரு மேட்ச் மொத்தமாக அடுத்த ரௌண்டே போகமுடியாமல் செய்து இந்திய அணியின் கோப்பை கனவுக்கே ஆப்படித்துவிட்டது.
2007ல் ஆறு மாதம் கழித்து டி20 உலக கோப்பை ஆரம்பித்த போது, அப்போதைய கிரிக்கெட் ஆச்சாரவாதிகளான ட்ராவிட், சச்சின், கங்குலி மூவரும், இதில் கலந்து கொள்ளமாட்டோம், இளைஞர்களுக்கு வழிவிடுகிறோம் என ஒதுங்கி கொள்ள, அந்த இளைஞர் அணி தோனி தலைமையில் கோப்பையை வென்றது. ட்ராவிட்டின் துரதிர்ஷ்டம் அவரை கோப்பை பக்கமே போகவிடவில்லை. சச்சினாவது பின்னொரு மகத்தான நாளில், அதாவது 2011ல் உலக கோப்பையை தூக்கி தன் கிரிக்கெட் வரலாற்றின், ஒரே ஒரு மிச்ச குறையை தீர்த்து கொண்டார்.
கேரி கிர்ஸ்டன்
கேரி கிர்ஸ்டன்

ஆனால் அவரது சமகாலத்திய லெஜண்ட்களான கங்குலி, ட்ராவிட், கும்ப்ளேவுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவேயில்லை. ட்ராவிட் இன்று கோச்சாக அப்படியொரு உலக கோப்பையை கையில் ஏந்தியிருக்கிறார். கோப்பையை வாங்கி அதை வானுயர்த்தி செய்த வெறிக்கூச்சலை பாருங்கள்.. அவர் ஆடிய காலத்திலேயே இப்படி பெரும்பாலும் கத்த மாட்டார், பொறுமையாக இருக்கக்கூடியவர்.

2024 world cup Rahul Dravid
2024 world cup Rahul Dravid
இந்திய கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மென்களில் ஒருவர், 48 சர்வதேச சதங்களும், 24 ஆயிரம் ரன்களுமாக ஆடி குவித்தவர், உலக கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவர் என மற்ற நாட்டு லெஜண்டுகளால் மதிக்கப்படுபவர், எத்தனை போட்டிகள், எத்தனை சாதனைகள். அவரிடம் இருந்து பீறிட்டு வரும் இந்த வெற்றி கூச்சல் கண்களை நனைய வைக்கிறது. எத்தனை வருடம் தேக்கி வைத்திருந்த உணர்வு இது..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.