தமிழகத்தில் 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகள் சேவை துவக்கம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி,  இன்று (09.10.2024) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக பேருந்து சேவைகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் வாயிலாக மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 22.69 கோடி ரூபாய் மதிப்பிலாை 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை,  மாண்புமிகு போக்குவரத்துத்துனை அனமச்சர் சா.சி.சிவசங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 352 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல கட்டமாக இதுநாள் வரை 170.60 கோடி ரூபாய் மதிப்பிலான 188 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நினலயில், மேலும் தற்பொழுது 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகள் இன்று (09.10.2024) முதல் இயக்கப்பட உள்ளது. புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளது.

SIR Tamil Movie

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

புதிய தாழ்தள பேருந்து
புதிய தாழ்தள பேருந்து

இந்நிகழ்வில், போக்குவரத்துத்துனை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா்  க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப.இ மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., ஜெர்மன் குடியரசின் துணை தூதரகத்தின் பொது துணை தூதர் மிச்செல குச்லர் (Michaela Kuchler),  ஜெர்மன் வங்கியின் இந்திய நாட்டிற்கான இயக்குநர்  உல்ஃப் முத் (Wolf Muth), முதுநினல போக்குவரத்து நிபுணர் சுவாதி கண்ணா, மாநகர் போக்குவரத்துக்கழக இணை மேலாண் இயக்குநர்,  செ.நடராஜன், சாலை போக்குவரத்து நிறுவை இயக்குநர் சு.ரங்கநாதன், தமிழ்நாடு போக்குவரத்து நிதி கழக இணை மேலாண் இயக்குநர் வெ.வெங்கட்ராஜன்,  உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.