9 நிறுவனங்களில் அதிரடி சோதனையில் நூற்றுக்கணக்கான கோடிகளில் போலி பில் போட்டு ஏமாற்றியது கண்டுபிடிப்பு !
9 இடங்களில் மேக்னா, சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
திருச்சி மாவட்டம் முசிறி உட்பட 9 இடங்களில் மேக்னா, சிவா டெக்ஸூக்கு சொந்தமான ஜவுளி நிறுவனங்கள் மற்றும் இவர்களுக்கு சொந்தமான கிளைகள், வீடு, அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வைகைநல்லூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராமதாஸ் (50).இவர் மேக்னா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துறையூர் முசிறி, பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் ஜவுளி கடைகள் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையின்போது ஜவுளி விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு போலி பில் கொடுத்து வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி வருமானவரித்துறை உதவி இயக்குனர் பாலாஜி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையானது தொடர்ந்து இன்று இரவு முதல் நாளையும் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி விற்பனைக்கு கொள்முதல் செய்த ஜவுளிகளை தமிழகத்தின் பிரபல கடைகளும் இவர்கள் மூலம் மொத்தமாவும், சில்லரையாகவும் விற்பனை செய்த பில்களில் இரண்டு வகைகளாக பில் போட்டு நூற்றுக்கணக்கான கோடிகள் வரி ஏமாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.
சோதனை முடிவில் நிறுவனத்தில் எந்த அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது என தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்திரிக்கையாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி மாவட்டம் திருச்சி ரோட்டில் இயங்கி வரும் பிரபல ஜவுளி நிறுவனமான சில்க் சில் வருமான வரித்துறையினர் ,சுமார் 9 மணி நேரமாக தொடர்ந்து அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். பிரதான கதவுகள் மற்றும் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்ட நிலையில் கடையின் உள்புறம் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் செய்தி சேகரிப்பதற்காக கடை முன்பு நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர்களை கடை நிர்வாகிகள் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் குண்டர்களை ஏவி விட்டும் தாக்குவதற்கு முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பெண் அதிகாரிகள் இருவர் தற்போது கடை உள்ளே சென்று ஆய்வு செய்து வருவதால், ஏற்கனவே 10 பேர் கொண்டவருமான வரித்துறை குழுவினர் காலை முதல் மாலை வரை சோதனை செய்து வரும் நிலையில் தற்போது பெண் அதிகாரிகள் 2 பேர் கூடுதலாக வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.