அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நம்மை எப்படியெல்லாம் உளவு பார்க்குறாங்க தெரியுமா?

திருச்சியில் அடகு நகையை விற்க

நான் தமிழ்நாட்டு உளவுத் துறையின் முன்னாள் அதிகாரியின் மகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் என் கல்லூரிக் கால நண்பர். அவர் சொன்ன தகவல்கள் சுவாரசியமானவை. முக்கியமானவை. அவற்றில் சில:
1. 1970-களில் மதுரை தல்லாகுளத்தில் இருக்கும் ஒரு அரங்கில் சிபிஐ (எம்) கட்சி மாநாடு நடந்தது. அரங்கில் பொருத்தப்பட்ட ஒரு bug மூலம் அனைத்து நடவடிக்கைகளயும் உளவுத் துறை வேறு ஒரு இடத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது.
2. இது ஏற்கெனவே தெரிந்த தகவல்தான். அதாவது எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வரும் கடிதங்களை அஞ்சல் அலுவலகத்திற்கு தினமும் சென்று உளவுத் துறைக்கு எடுத்துச் செல்வதற்கென்றே ஒரு காவலர் இருந்தார். அவற்றை எடுத்துச் சென்று ஒட்டப்பட்டிருக்கும் பகுதியை ஒரு விளக்கின் வெப்பத்தில் சூடாக்கி, பிரித்து அதிகாரிகள் படித்து விடுவர். அதில் இருக்கும் தகவல் அரசியல்ரீதியாக முக்கியமானதாக இருந்தால் கடிதம் அங்கேயே தங்கிவிடும். இல்லையெனில் மீண்டும் அஞ்சல் அலுவலகத்திற்கும், பின்னர் சரியான முகவரிக்கும் சென்றுவிடும்.
3. இப்போது கொசுவின் அளவே உள்ள டிரோன்கள் வந்துவிட்டன. அவை வீடியோ கூட எடுக்கும் திறன்பெற்றவை. (எனவே காதுக்கருகில் வந்து ரீங்காரமிடும் கொசுக்களை அடித்து விடாதீர்கள். கொலைக் குற்றத்திற்காக உங்களைக் கைது செய்வதற்கான ஆதாரம் அதில் இருக்கக்கூடும்.)
4. டிரோன்கள் நாட்டின் எல்லை கடந்து வந்து போதைப் பொருள் பாக்கெட்டுகளை ஆங்காங்கு இறக்கிவிட்டுச் செல்கின்றன.
ஏற்கெனவே பெகாசஸ் பிரச்சினை நமக்குத் தெரியும். பல அரசியல் தலைவர்கள் (குறிப்பாக இடதுசாரி தலைவர்கள் பலர் அழைப்புகளுக்கு வாட்ஸாப்பை பயன்படுத்துவதில்லை. அரசியல் மற்றும் இயக்கம் தொடர்பான உரையாடல்களை regular call மூலம் நடத்துகின்றனர். உங்கள் திட்டங்களை அறிந்துகொள்ள bug தேவையில்லை. நீங்களே உளவுத் துறைக்கு கொடுத்துவிடுகிறீரகள். வாட்ஸாப்தான் இப்போதைக்கு பாதுகாப்பான தொலைதொடர்பு சாதனம்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

—  விஜயசங்கர் , பத்திரிகையாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.