அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சிறு தொழில்களுக்கு அச்சுறுத்தல்! கடலை மாவு மீதான கட்டுப்பாடுகளால் உற்பத்தியாளர்கள் கவலை!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சிறு தொழில் துறைக்கு பெரும் அச்சுறுத்தல் – கடலை மாவு மீது மட்டும் தேர்ந்தெடுத்த கட்டுப்பாடுகள். அனைத்து வகை மாவு உணவுகளுக்கும் ஒரே சட்டம் கடலை மாவுக்கு மட்டும் ஏன் தனி சுமை? மற்ற மாவு வகைகளுக்கு பொதுவான உணவுப் பாதுகாப்பு விதிகள் மட்டுமே இருக்கும் நிலையில் கடலை மாவுக்கு மட்டும் ஏன் தனி கனிம உலோக வரம்புகள் மதுரை மாவட்ட மாவு உற்பத்தியாளர் சங்கத்தினர் ஏனைய மாவு வகைகளுக்கு உள்ளது போல கடலை மாவிற்கும் சமநிலை கோரி உள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (மாசுகள்,நச்சுக்கள் மற்றும் எச்சங்கள்) ஒழுங்குமுறைகளின் கீழ் கொண்டைக் கடலையிலிருந்து தயாரிக்கப்படும் கடலைமாவில் காணப்படும் ஈயம் மற்றும் காட்மியம் போன்ற கனிம உலோகங்களுக்கு குறிப்பிட்ட வரம்புகளை உணவுப்பாதுகாப்பு மற்றும தரநிர்ணய ஆணையம்(FSSAI) சமீபத்தில் நிர்ணயித்து, 2026 டிசம்பர் முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

மதுரை மாவட்ட மாவு உற்பத்தியாளர்கள் சங்கம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்களை எடுத்துரைத்து, தகுந்த நடவடிக்கை உடன் மேற்கொள்ளக்கோரி, விரிவான கோரிக்கை  மடலினை புதுடில்லி, உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் தலைவர் மற்றும் செயல் நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அந்த மனுவில் மாசடைந்த மண், பாசனநீர் மற்றும் விவசாய மட்டத்தில் உபயோகப்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியவற்றால், விவசாய விளைபொருட்களில் ஈயம், காட்மியம் போன்ற கனிம உலோகங்கள் சேர்கின்றன. மாவுஆலை நிறுவனங்கள் கடலையை பதப்படுத்திதும் போது, எவ்வித வழியிலும் அத்தகைய இயற்கை மாசுக்களை அகற்றவோ, குறைக்கவோ இயலாது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

10-07-2026ம் நாள், புதுடில்லி FSSAI உதவி இயக்குநர் தலைமையில் நடை பெற்ற Google Meet-ல், கடலை மாவில் காணப்படும் லீடு(Lead) மற்றும் காட்மியம்(Cadmium)வரம்புகள் குறித்த முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது. மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தெய்வராஜன் தலைமையில், சக நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் இந்த கலந்தாய்வில் பங்கேற்று மாவுத்தொழில்துறையை பாதிக்கும் நடைமுறை சிக்கல்களை விரிவாக முன் வைத்தனர். சங்கத் தலைவர் குறிப்பிட்டதாவது:

யாவரும் கேளீர்

கடலைமாவு போன்ற பருப்பு மாவுகளுக்கு மட்டும் லீடு மற்றும் காட்மியம் குறித்த தனி வரம்புகள் தற்போது புதிதாக விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சோயா, கோதுமை, மைதா, அரிசிமாவு, நிலக்கடலை, எள்ளு,தேங்காய், சிறுதானிய மாவுகள் (ராகி, பஜ்ரா, ஜோவர்) மரவள்ளிக்கிழங்குமாவுபோன்றமாவுவகைகளுக்குபொதுவான உணவு பாதுகாப்புவிதிகள் மட்டுமே (General Safety Provisions) நடைமுறையில் உள்ளன. மேலும் அனைத்து உணவுப்பொருட்களும், கடலை மாவு உட்பட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின்கீழ் ஏற்கனவே கட்டுப்பாட்டில் உள்ளன. MSME துறையை பாதுகாக்க உடனடி திருத்த நடவடிக்கைகள் அவசியம் என்றும், சமச்சீரான மற்றும் நடைமுறைக்கு உகந்த தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.