தமிழ்நாட்டு கோயில் கோபுரங்களின் உயரம்

நம்ம தமிழ்நாட்டு கோயில் கோபுரத்தை பார்த்தாலே ஒரு பிரமிப்பு வரும். வெறும் கல்லு கட்டிடம் இல்ல, நம்ம முன்னோர்களோட கணக்கு, உழைப்பு, கலை எல்லாம் சேர்ந்த அடையாளம்.

தமிழ்நாட்டுல மிக உயரமான கோபுரங்கள் எது தெரியுமா?

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் – 236 அடி உயரம், 13 நிலை. தமிழ்நாட்டுலேயே மிக உயரமானது இதுதான்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் – 217 அடி, 11 நிலை.

தஞ்சாவூர் பெரிய கோயில் மூலவர் விமானம் – 216 அடி. இது கோபுரம் இல்ல, கருவறை மேல இருக்கிற விமானம்.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் – 192 அடி, 11 நிலை. நம்ம தமிழ்நாடு அரசு சின்னமே இதுதான்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் – 192 அடி, 11 நிலை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு கோபுரம் – 170 அடி, 9 நிலை.

திருச்செந்தூர் முருகன் கோயில் – 157 அடி, 9 நிலை.

இதுல நீங்க நேர்ல பார்த்து வியந்த கோபுரம் எது?

—  கோமதி

Comments are closed, but trackbacks and pingbacks are open.