பழனி திருக்கோயில் உண்டியல் காணிக்கை வசூல் விவரம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கடந்த 14.10.2026, 15.10.2026 ஆகிய தேதிகளில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. இதில் திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) வெங்கடேஷ், முதுநிலை கணக்கு அலுவலர் குருநாதன் திண்டுக்கல் மண்டல துணை ஆணையர் (சரிபார்ப்பு அலுவலர்) அன்னக்கொடி, திண்டுக்கல் மாவட்ட உதவி ஆணையர் நாகவேல், ஆய்வர் சுவாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் திறப்பில், திருக்கோயில் மேலாளர் உமா, கணக்கு அலுவலர் கார்த்திகேயன், காசாளர் முருகேஸ்வரன், கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வங்கி ஊழியர்கள் கல்லூரி மாணவிகள், வெளிமுகமைப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
பழனி அருள்மிகு. தண்டாயுதபாணி திருக்கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணும் போது தங்கம் 921.290 கிராம், வெள்ளி 15183 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1409 எண்ணம், ரொக்கத்தொகை ரூ. 4,55,13,466 கிடைக்கப் பெற்றதாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி அம்மாள் திருக்கோயில் உண்டியலில் ரூ. 25,062, ஆவினன்குடி திருக்கோயில் உண்டியலில் ரூ. 26,60,019 ரொக்க பணமும் தங்கம் 62.530 கிராம், வெள்ளி 694 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 136 எண்ணம் காணிக்கையாக கிடைக்க பெற்றது.
அது போல் பெரிய நாயகி அம்மன் திருக்கோயில் உண்டியல் எண்ணும் போது ரூ. 1,37,712, தங்கம் 9.030 கிராம் கிடைக்க பெற்றது. மேலும், பெரியாவுடையார் திருக்கோயில் உண்டியலில் இருந்து ரூ. 1,01,83 கிடைக்க பெற்றது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் உண்டியல் காணிக்கை மொத்த வரவு ரூ. 4,84,38,098 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.