வேட்பாளர்கள் வரவேற்கப்படுகின்றனர், விளம்பரம் கொடுத்த அரசியல் கட்சி -உள்ளாட்சித் தேர்தல் கலாட்டா !
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தலாகும். ஏனென்றால் மக்களை நேரடியாக சந்திக்க கூடிய அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருப்பதால் கட்சியின் வளர்ச்சி, மக்கள் தொடர்பு என்று அரசியல் கட்சிகளுக்கு தேவையான அனைத்துமே உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக பெருமளவில் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.
பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை அனைத்து கட்சிகளுமே தங்கள் கட்சியின் சார்பில் நடைப்பெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதில், இந்திய ஜனநாயக கட்சி ( IJK ) 2010 துவங்கப்பட்டது . இதன் நோக்கமே படித்த இளைஞர்கள் (ஆண்கள் , பெண்கள் ) அரசியலில் ஆர்வம் கொள்ள செய்வதற்கான ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுப்பதுதான். அந்த வகையில் வருகிற மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிற இளைஞர்கள் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு தொடர்பு கொள்ளலாம் என்று தொலைபேசி என்னோடு குறிப்பிடப்பட்டிருக்கிறது அந்த விளம்பரம்.
இப்படி இந்திய ஜனநாயக கட்சி விளம்பரம் மூலம் கட்சிக்கு ஆட்களையும், வேட்பாளரையும் தேர்வு செய்ய முயற்சி எடுத்து வருகிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஐஜேகே கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் வெற்றி பெற்றார். அதன்பிறகு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து ஐஜேகே வெளியேறியது. இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லாமல் விளம்பரம் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்ய முயற்சி எடுத்து வருகிறது.