குபேரன் என்ன டான்ஸரா, அவருடன் டேட்டிங் போக ?
குபேரன் என்ன டான்ஸரா, அவருடன் டேட்டிங் போக?
திருவண்ணாமலை நகரத்தின் பலபகுதிகளில் இந்த போஸ்டரை காண முடிந்தது. குபேரருடன் ஒருநாளாம். 5 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒரு கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரி, குபேர கிரிவலம் என திட்டமிட்டு பரப்பினான். அதுக்குறித்து ஒரு கட்டுரை எழுதி முதன்முதலாக ……………………. பத்திரிக்கை பரப்பியது.
கிரிவலப்பாதையில் குபேர லிங்கத்தின் மவுசு ஒரேநாளில் பரவி ஆயிரக்கணக்கானவர்கள் வந்தார்கள்.
விளைவு?
இன்று பெரும்பாலான செய்தித்தாள், டிவி சேனல்கள், அந்தநாள் குறித்து சிலாகித்து சிறப்பு செய்திகள் வெளியிட துவங்கியுள்ளன.
குபேர கிரிவலத்துக்கான ஆன்மீக கதைகள் பலப்பல எழுதப்பட்டுவருகின்றன.
இதை படிக்கும் பக்தர்கள் உண்மையென நம்பி பௌர்ணமிக்கு அடுத்தபடியாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி இன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வரத்துவங்கியுள்ளார்கள்.
கோவில் நிர்வாகமும் இந்நாளை இப்போது பணமாக்க துவங்கியுள்ளன.
இந்தாண்டு குபேர கிரிவலத்துக்கு ஏதோ ஒரு ஊரைச்சேர்ந்த ஆன்மீக வியாபாரி திருவண்ணாமலையில் கடை விரித்து யாகம் நடத்தப்போகிறேன் கலந்துக்கொள்ளுங்கள் என போஸ்டர் ஓட்டி வசூல் வேட்டையில் குதித்துள்ளார்.
எப்படியும் சிலபல லட்சங்கள் தேத்துவார், அதைவிட தன்னை பிரபலப்படுத்தியும் கொள்வார்.
மனநோயாளியையும் மகானாக்கி கும்பிடுபவர்கள் பகுத்தறிவில்லாத ஆன்மீக கூட்டம் யாகம் நடத்தும் இந்தாளை வணங்கமாட்டார்களா என்ன?