இந்த வாழ்க்கை வாழ்வதற்கே…
இந்த வாழ்க்கை
வாழ்வதற்கே…
@@@@@@@@@@@@
கேரளாவில்
ஆணாகப் பிறந்து,
பின்னர் திருநங்கையாக
மாறியவர்
ஜியா பவல்.
இவர் பாரம்பரிய நடனக்காரர்.
பெண்ணாகப் பிறந்து பின்னர், திருநம்பியாக மாறியவர் ஜஹாத். இவர் கணக்காளர்.
இவர்களில்
திருநம்பியாக மாறிப் போன ஜஹாத் இன்
வயிற்றில் தற்போது எட்டு மாதக் குழந்தை
சிசுவாக வளர்ந்து
கொண்டிருக்கிறது.
இது எவ்விதம் நிகழ்ந்தது??
இந்த ஆசை வேர்
அவர்களுக்குள்
எப்படி துளிர்த்தது???
ஒரு ஃப்ளாஸ் பேக்.
இவர்கள் இருவரும் தங்களது மூன்றாம் பாலின உணர்வுகளையும்
உடலியல் மாற்றங்களையும்
உணரும் போது
வழக்கம் போல
அவரவர் வீடுகளில்
இருந்து வெளியேறி
விடுகிறார்கள்.
பின்னர் ஹார்மோன் தெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டு
திருநங்கையாகவும்
திருநம்பியாகவும்
மாறிப் போகின்றனர்.
இவர்கள் இடையே
மெலிதான காதல்
மலர்கிறது.
இந்த இருவரும்
கடந்த மூன்றாண்டுகளாக
தம்பதியராக
இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
அப்போது அவர்களுக்குள்ளும்
சின்னச் சின்ன ஆசைகள் இருக்கும் அல்லவா??
ஆணாகப் பிறந்து
திருநங்கையாக
மாறி விட்ட
ஜியா பவல்க்கும்…
பெண்ணாகப்
பிறந்து திருநம்பியாக
மாறி விட்ட
ஜஹாத்துக்கும்…
தங்களுக்கிடையே
குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்
என்கிற ஆசை.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி
மருத்துவக் குழுவினரிடம்
முறைப்படி ஆலோசனை
பெறுகிறார்கள்.
பெண்ணாகப்
பிறந்து திருநம்பியாக மாறிய
ஜஹாத்துக்கு…
அந்த அறுவை சிகிச்சையின் போது
ஜஹாத்தின் மார்பகங்கள் இரண்டும்
அகற்றப்பட்டனவே
தவிர,
ஜஹாத்தின்
கர்ப்பப்பை
அகற்றப்படவில்லை.
தாராளமான
பச்சைக் கொடி மருத்துவர்களால்
காட்டப்பட்டது.
அப்புறம் என்ன???
பெண்ணாகப் பிறந்து
ஆணாக அதாவது திருநம்பியாக மாறிய
ஜஹாத் வயிற்றில்
கருத் தரித்தது.
இந்த 2023 பிப்ரவரி மாதத்தில் ஜஹாத்
எட்டு மாதக் கர்ப்பிணி…
எட்டு மாதக்
கர்ப்பிணன்.
எது எவ்விதமாக
இருந்தால் என்ன???
பெண்ணாகப் பிறந்து வளர்ந்து
இயல்பான சில
வாழ்வியல் மற்றும் உடலியல் மாற்றங்களினால்
அறுவை சிகிச்சை வாயிலாக
திருநம்பியாக
மாறிப் போன
ஒருவரின் வயிற்றில்
கரு ஒன்று எட்டு மாதக் குழந்தையாக
வளர்ந்து கொண்டு
இருக்கின்றது.
ஜஹாத்துக்கு
மார்பகங்கள்
இல்லை என்பதால்
பிறக்கப் போகும்
குழந்தைக்கு
மருத்துவக் கல்லூரி
தாய்ப் பால் வங்கியில் இருந்து
தாய்ப் பால் பெற்றுக்
கொள்ளும் எண்ணமும் திட்டமும்
அவர்களிடம் உள்ளது.
திருநம்பி ஒருவர்
குழந்தைப் பெற்றுக் கொள்ள இருப்பது
இந்தியாவில் இதுவே
முதல் முறை எனச்
சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில்
இந்திய அளவில்
திருநங்கைகளில்
பதினெட்டு நபர்களுக்குக்
குழந்தைகள் பிறந்துள்ளதாக
மருத்துவப் புள்ளி
விபரங்கள்
தெரிவிக்கின்றன.
திருநங்கை
ஜியா பவல்க்கும்
திருநம்பி
ஜஹாத்துக்கும்
வாழ்த்துகள்….
இந்த
வாழ்க்கை
வாழ்வதற்கே
தான்.
@ ஸ்ரீரங்கம்
திருநாவுக்கரசு.