அங்குசம் சேனலில் இணைய

அண்ணாமலை மீது திருச்சி எஸ்பியிடம் புகார்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து தமிழ்நாடு BJP தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்பியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மணப்பாறையை சேர்ந்த  வழக்கறிஞர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மணப்பாறையை சேர்ந்த முரளிகிருஷ்ணன் (45), வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவர் 18.04.2023 அன்று மதியம் 1.00 மணி அளவில் @mknadvocate 660m என்ற தனது  Twitter கணக்கை பார்த்து கொண்டிருந்த போது  @annamalai_k 6760TM Twitter என்ற கணக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பற்றி அவதூராகவும், கற்பனை செய்யப்பட்ட படங்களும் , மேலும் அண்ணாமலை பேசுவது போல் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊழல் செய்து கோடிக்கணக்கான சொத்து வைத்து இருந்ததாகவும், ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் மயக்கம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில், சிகிச்சைக்குப் பின் இன்று (20.04.2023) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து பரம்பரையாக பொது வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்தி பொது மக்களிடம் பெரும் நன் மதிப்பு நற்பெயர் எடுத்த முன்னாள் அமைச்சர் அமரர் அன்பில் தர்மலிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழி ஆகியோரின் குடும்ப கௌரவத்தை கெடுக்கும் எண்ணத்தில் அவர்களின் புகழுக்கு ஊறு விலைவித்து பொய் செய்திகளை வெளியிட்ட BJP தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மீது சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.