ஸ்ரீ சத்குருநாத மாமுனிவரின் 108 ஆம் ஆண்டு மகா குருபூஜை !
ஸ்ரீ சத்குருநாத மாமுனிவரின் 108 ஆம் ஆண்டு மகா குருபூஜை !
ஸ்ரீ சத்குருநாத மாமுனிவரின் 108 ஆம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழாவை முன்னிட்டு சாதி, சமய, மொழி, இட வேறுபாடின்றி சமபந்தி விருந்தளிக்கும் அன்னதான விழா
ஸ்ரீ சத்குருநாத மாமுனிவரின் 108 ஆம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழாவை முன்னிட்டு அன்னதான விழா
திருவானைக்கோவில் சிவராம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சற்குரு ராஜயோக திருமடத்தில் ஸ்ரீ சற்குரு சாமி ராஜயோக திருமட அறக்கட்டளை சார்பில் அன்னதான விழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்துர் வட்டம் நடுவப்பட்டியில் பிறந்த ஸ்ரீ சற்குரு மகாமுனிவர் அகத்தியர் பரம்பரையில் 9 வது முனிவராக தோன்றியவர். ஸ்ரீ சற்குரு நாத மகாமுனிவர் திருவானைக்கோவில் சிவராம் பகுதியில், பத்து அடி ஆழத்தில் எண் கோண வடிவில் தானே அமைத்த தியான குகையில் 48 நாட்கள், இரண்டு மண்டலமாக நிற்விகல்ப சமாதி நிலையில் தவமிருந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தவம் இருந்த போதிலும் திருச்சி திருவானைக்கோவில் ஸ்ரீ சற்குரு இராஜயோக திருமடம் மிக சிறப்பு வாய்ந்த இடமாக விளங்குகிறது.
இத்திருமடமானது ஸ்ரீ சற்குரு நாத மகாமுனிவரால் சுயமாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்ட ஒரே இடமாகும்.ஸ்ரீ சற்குரு நாதர் அஷ்டாங்க யோகத்தின் மூலம் அஷ்டமாசித்தி பெற்றிருந்தும் சித்துக்களை கற்பனையே என்று கூறியுள்ளார். பக்தர்களுக்கு பக்தியே சிறந்தது என்றும் பக்தியின் மூலமே அத்வைத நிலையை அடைய முடியுமெனவும், உபதேசித்து உள்ளார்.சைவ வழி நெறி நின்று சரியை, கிரியை,யோகம்,ஞானம் முதலிய படிகளில் சாதனை புரிய உபதேசித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் திருவோணம் அவிட்ட நட்சத்திரங்களில் தியானம் செய்ய உபதேசித்தருளி உள்ளார். இவர் ஜாதி, மத, மொழி வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் கொள்கை கொண்டவர். திருவானைக்கோவிலில் முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மக்களை ஆலய பிரவேசம் செய்யவைத்தவர்.
அதன் தொடர்ச்சியாக மகா குருபூசையின் முதல்நாள் ஸ்ரீ சற்குரு நாதரின் மலர் அலங்காரத்துடன் திருவானைக் கோவிலைச் சுற்றி திருவீதி உலா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. ஏழை மக்களிடத்தில் மிகுந்த கருணை கொண்டிருந்தார். 1913 ஆம் ஆண்டிலேயே குரு பூசை விழாக்களை நடத்தி சமபந்தி விருந்துண்ண செய்துள்ளார்கள்.அதைத் தொடர்ந்து இதுநாள்வரை பக்தர்களால் ஆண்டுதோறும் குரு பூசை சமபந்தி போஜனம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீ சற்குரு நாதர் நாட்டு மக்களுக்கு சாதி, சமய, மொழி, இட வேறுபாடின்றி சமபந்தி விருந்தளித்து வருவதுடன், கல்வி அறிவை கற்பிக்கவும் செய்து, குரு உபதேசம் பெற்று பக்தி, கர்ம, யோக, ஞான சாதனைகளை செய்து பிறவிப்பயனை அடைய உபதேசம் செய்துள்ளார்.சாதி, சமய, மொழி, இட வேறுபாடின்றி சமபந்தி விருந்தளிக்கும் அன்னதான விழாவினை சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குரு சிவகிரி மடம் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள், நீலகிரி ஜெயக்குமார் சுவாமிகள், சத்குரு அடியார் மல்லையா சாமி , சரோஜா அம்மையார், குரு தரும பிரச்சார சபா அகில உலக இணைச்செயலாளர் விரேஸ்வரனந்தா, தமிழ்நாடு மாநில தலைவர் வழக்கறிஞர் இளங்கோ, மதுரை மாவட்ட தலைவர் ஆறுமுகம், செயலர் சங்கர் மணி,
ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்க தலைவர் மோகன்ராம், வழக்கறிஞர் கணேசன், ஸ்ரீ சற்குரு ராஜயோக திருமட அறக்கட்டளை தலைவர் ராஜகோபால், செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் நாகராஜன், துணைச் செயலாளர் ராஜமாணிக்கம், துணைப் பொருளாளர் சுரேஷ்குமார், முத்தமிழ் விரும்பி, முரளிதரன், ஜான்சன், தமிழ்வாணன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சாலை பயனீட்டாளர் நல அமைப்பு அய்யாரப்பன் முன்னிலையில் துவங்கி வைத்தார். ஸ்ரீ சற்குருநாத மாமுனிவரின் 108 ஆம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழாவிற்கு நீலகிரி, தேனி, சுப்பலாபுரம், துறையூர், நாகநல்லூர், வெள்ளனூர், பழனி, கோவை, புளியம்பட்டி, திருச்சி உள்ளிட்ட ஸ்ரீ சத்குருநாத அடியார்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.