முதலமைச்சர் கோப்பை – மகளிர் ஹாக்கி போட்டி தங்கம் வென்ற சிவகங்கை வீராங்கனைகள் !
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் ஹாக்கி
போட்டி பெண்கள் பிரிவில் தங்கம் வென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு சிவகங்கை பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
கடந்த 30 ந்தேதி முதல் சென்னையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஹாக்கி விளையாட்டு போட்டியும் இடம்பெற்ற நிலையில், பள்ளிகளுக்கிடையே 13.07.2023 அன்று நடைபெற்ற விளையாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் தங்கம் வென்றனர்.
வெற்றி கோப்பையுடன் திரும்பிய 18 வீராங்கனைகளுக்கும் சிவகங்கை பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், வீராங்கனைகளுக்கு பூக்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பெற்றோர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டு வீராங்கனைகளை பாராட்டினர்.வெற்றி பெற்ற 18 வீராங்கனைகளுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.