மாணவச் சமுதாயம் ஆளுமைத்திறத்தோடு மாறுவதே சமூகத்திற்கான அவசரத்தேவை – முனைவர் ஜா.சலேத் பேச்சு
மாணவச் சமுதாயம் ஆளுமைத்திறத்தோடு மாறுவதே சமூகத்திற்கான அவசரத்தேவை கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிலரங்கில் முனைவர் ஜா.சலேத் பேச்சு
திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அக ஒருங்கிணைப்பு மற்றும் ஆளுமைத்திறன் வளர்ப்பு பயிலரங்கம் நடைபெற்றது. பள்ளியின் காசாளர் அருள்சகோதரர் ஜான்பால் பயிலரங்கத் தொடங்கி வைத்தார். தமிழாசிரியர் சதீஷ் ஞானபிரகாசம் வரவேற்புரை வழங்கினார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
மாணவர்களின் உள்ளக்கிடக்கை எப்போதுமே சுதந்திரத்தை நோக்கியே இருக்கும். அதை சரியாக மடைமாற்றம் செய்து மனதை விசாலப்படுத்தப் பழக வேண்டும். இன்றைய ஊடகங்களைச் சரியாக உள்வாங்கி உருவாக்கப்படும் எதார்த்தங்களைப் புரிந்து கொண்டு முன்னேற வேண்டும்.சரியான திட்டமிடல், உரிய நேரத்தில் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றோடு வளர்ந்து சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக மாற வேண்டும்.இப்படி ஆளுமைத் திறனுள்ளவர்களாக மாறினால் உங்களுக்கு நீங்களே விளக்காக மாறி சமூகத்திற்குப் பயன்படுவீர்கள் என்பது போன்ற கருத்துக்கைப் பகிர்ந்து கொண்டார். இப்பயிலரங்கில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.
– சதீஷ் ஞானபிரகாசம்