தங்கப்பதக்கம் பெற்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு !
தங்கப்பதக்கம் பெற்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு.
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, கீழரசூர் முத்துசாமி என்பவர் மகள் ஹர்ஷினிதேவி. சீதாலெட்சுமி கல்லூரியில் B.sc Hospital. Administration பிரிவில் இளம் அறிவியல் பிரிவில் மிகு சிறப்பு A+ தரத்துடன் தங்கப்பதக்கம் வென்றார்.
இதற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38 வது பட்டமளிப்பு விழாவில் பாரதபிரதமர் நரேந்திரமோடி, ஆளுனர் ஆர் .என். ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்ற விழாவில் பதக்கம் மற்றும் பட்டம் பெற்றார்.இதனை கல்லூரி முதல்வர், துறைத்தலைவர், பேராசிரியர்கள், மாணவிகள் மாணவிகள் பாராட்டி வாழ்த்தினர். பல்வேறு பாட பிரிவுகளில் தங்கம்பதக்கம் பெற்ற மாணவிகளும் வாழ்த்து பெற்றனர்.