பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆட்சிக் குழுத் தேர்தல் – முடிவுகள் !
பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆட்சிக் குழுத் தேர்தல் – முடிவுகள் இன்று (27.01.2024) பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களுக்கானத் தேர்தல் நடைபெற்றது.
முதல்வர்கள் தொகுதியில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் தேர்தலில், ஜெயங்கொண்டம் அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் இரமேஷ், புதுக்கோட்டை நயினார் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் திருச்செல்வம், தஞ்சாவூர் அடைக்கால மாதா கல்லூரி முதல்வர் முனைவர் என்.சுமதி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் திருச்செல்வம் என் சுமதி ஆகியோர் வெற்றிப் பெற்றுள்ளார்.
ஆசிரியர் தொகுதியில் 2 இடங்களுக்கான ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் தேர்தலில், திருச்சி தந்தைப் பெரியார் கல்லூரிப் பேராசிரியரும், அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொருளாளருமான முனைவர் கோபாலகிருஷ்ணன், தேசியக் கல்லூரிப் பேராசிரியர் முத்து இராமகிருஷ்ணன், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கதின் சார்பில் திருவையாறு அரசர் கல்லூரி நூலகர் இரமேஷ், ஆக்டா சங்கத்தின் சார்பில் திருச்சி தூய வளனார் கல்லூரி பேராசிரியர், ஆக்டா சங்கதின் மாநிலச் செயலாளர் முனைவர் சகாய சதீஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பில் போட்டியிட்ட முனைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் போட்டியிட்ட இரமேஷ் ஆகியோர் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்தத் தகவலை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர், மயிலாடுதுறை மாவட்டம் டிபிஎம்எல் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சேவியர் செல்வக்குமார் அங்குசம் செய்தி இதழுக்குத் தெரிவித்துள்ளார்.