மதுரையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா !
நேர்த்திக்கடனாக தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்ச ஏப்ரல் 20 ஆம் தேதி க்குள் கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா !
சித்திரை மாதத்திற்கு தனி சிறப்பு என்றால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தான். உலகப் பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் -12 அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சித்திரை திருவிழா இந்த வருடம் ஏப்- 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 19 ஆம் தேதியும், 20 ஆம் தேதி திக் விஜயமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 21 ஆம் தேதியும், 22 ஆம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.ஏப்ரல் 21 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது.
ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51மணியிலிருந்து 6.10மணிக்குள் சித்திரை திருவிழாவின் மைய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது அப்போது கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் சம்பவம் நடைபெறும். பக்தர்கள் இதனை நேர்த்திக்கடனாக தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்ச ஏப்ரல் 20 ஆம் தேதி க்குள் கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24 ஆம் தேதி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தலும், அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலை பூ பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர், அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார்.ஏப்ரல் 27 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு வந்தடைகிறார்.
ஷாகுல்