சினிமா பாணியில், கந்து வட்டியைவிட மோசம் தகராறு செய்த திமுக பெண் நிர்வாகி ! அலறும் நகைக்கடை உரிமையாளர்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சினிமா பாணியில், நகைக்கடையில் புகுந்து தகராறு செய்த திமுக பெண் நிர்வாகி ! கந்து வட்டியைவிட மோசம் நகைக்கடை உரிமையாளர் அலறல் – நகைக்கடை உரிமையாளருக்கும் திமுக பெண் நிர்வாகிக்கும்கந்து வட்டியால் ஏற்பட்ட தகராறில்,   நகைக்கடை உரிமையாளரிடம் நான் 7 கோடி ரூபாய் கொடுத்து உள்ளேன் என அந்த பெண் நிர்வாகி எகிரி எகிரி பேச  பதிலுக்கு நகைக்கடை உரிமையாளரோ  நான் வட்டியே 4 கோடி  வரை கொடுத்தேன் என்  எகிர இருவரும் கைகலப்பில் ஈடுபட்ட
சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் கடந்த 25 ஆண்டுகளாக தருமபுரி மாவட்டம்  காரிமங்கலம் கடைவீதியில் சரோஜினி என்ற பெயரில் நகைக்கடை ஒன்றை   நடத்தி வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் காரிமங்கலத்தை சேர்ந்த  தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட  மகளிர் தொண்டர் அணி  அமைப்பாளர் ஜெயா என்பவரிடம், கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுக்கல் வாங்கலில் இருந்துள்ளார் நகைக்கடை உரிமையாளர் பிரபு.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

முன்னாள் அமைச்சருடன் ஜெயா
முன்னாள் அமைச்சருடன் ஜெயா

சம்பவத்தன்று மே-19  திமுக  பெண் நிர்வாகி ஜெயா மற்றும் அவரது இரு மகன்கள் மற்றும் அடியாட்களோடு  காரிமங்கலம் சரோஜினி நகை கடைக்கு சென்று  உரிமையாளர், பிரபுவிடம் வட்டியுடன் 7 கோடி தர வேண்டும் என  கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். நகைக்கடை உரிமையாளரும் நான் வட்டியே 4 கோடி வரை கொடுத்து உள்ளேன் என கூற  இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பெண் நிர்வாகி  ஜெயா ஆளும் கட்சியில் பொறுப்பில் உள்ளதால் எங்கு சென்றாலும் பார்த்துக் கொள்கிறேன் என மிரட்டியும் , தகாத வார்த்தைகளால் பேசியும், கையில் வைத்திருந்த  செல்போனால் தன்  தலை மீது பலமாக தாக்கிவிட்டதாக கூறி  பிரபு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மீட் ஆகிய நிலையில் நான் கொடுத்த சொத்து பத்திரங்கள் மற்றும் வங்கி காசோலைகளை திருப்பி தராமல் உள்ளார் எனவும்  பணம் கொடுக்கவில்லையெனில் கொன்று விடுவேன் என மிரட்டியதாக  போலீஸில் புகார் செய்துள்ளார்.

நகைக்கடையில் ஜெயா
நகைக்கடையில் ஜெயா

இதுகுறித்து திமுக பெண் பிரமுகர் ஜெயாவிடம் பேசிய போது…   நான் கந்து வட்டி எல்லாம் விடலங்க அந்த நகைக்கடைக்கு என்ன பார்டனராகத்தான் சேர்த்துக்கொண்டார். அதனால் தெரிந்தவர்களிடம் எல்லாம் லட்ச கணக்கில்  கைமாத்தா வாங்கி கொடுப்பேன் அதற்கு பத்தோ , இந்தோ, (லட்சத்தில்) கொடுப்பார் நான் வாங்கி சாப்பிடுவேன் இப்படி தான் சார் ,  17 வருஷமா  பணம் வாங்கி கொடுத்தேன் .

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

என்ன ஆச்சோ தெரியல திடிரென கொடுத்த பணத்தை இல்லை என்று சொன்னார். அதனால் நேரில்  சென்று கேட்டபோது வாக்குவாதம் முற்றியது. என்னுடைய இரு மகன்கள் மற்றும் அவருக்கு தெரிந்த நபர்களை எல்லாம் வரவழைத்துவிட்டார். நான் அராஜகம் செய்யவில்லை அவர்தான் ஆட்களை செட்டப் செய்து என்னை அடித்தார்கள் . உடையை கிழித்தார்கள்.

அதை வீடியோவில் நீக்கி விட்டு போட்டுவிட்டனர். என்னுடைய செல்போன் அவருடைய தலையில் பட்டு காயம் ஏற்பட்டது உண்மை தான் நான் கொலை மிரட்டல் எல்லாம் விடல அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை என்னிடம் ஆறரை கோடிக்கு அவர் கையெழுத்து போட்ட வங்கி காசோலை  உள்ளது அவர் எந்த கோர்ட்க்கு போனாலும் என்னிடம் ஆதாரம் உள்ளது என்றார் மிக சாதாரணமாக

நகைக்கடை பிரபு
நகைக்கடை பிரபு

நகைக்கடை உரிமையாளர் பிரபு அளித்த பேட்டியில் .. திமுக நிர்வாகி ஜெயா என்பவரிடம் பணம் வாங்கியிருந்தேன். ஆனால் பணம் முழுவதையும் நான் கொடுத்துவிட்டேன். கந்து வட்டியோடு மோசம். 10 நாளுக்கு 1 லட்சம் எல்லாம் வட்டி போட்டாங்க. ஆனால் வட்டியோடு எல்லாத்தையும் கொடுத்துட்டேன். தற்போது ஆளுங்கட்சி என்பதால் என்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

angusam.com - சரோஜினி ஹால்மார்க் ஷோரூம்
angusam.com – சரோஜினி ஹால்மார்க் ஷோரூம்

காரிமங்கலத்தை சேர்ந்த அதிமுக புள்ளி கூறுகையில் – இரண்டு பேருமே கொடுக்கல் வாங்கலில் அன்யோன்யமாக இருந்தனர் அந்த கடைக்காரர் தம்பியும் கொஞ்சம் அப்படி இப்படிதான் அதனால் கூட நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் ! , அந்த ஜெயாம்மாவுக்கு 10 மேற்பட்ட வீடுகள் , சொகுசு கார்கள் உள்ளது அவரது தொழிலே வட்டி தொழில்தான் மீட்டர் வட்டி , ஸ்பீடு வட்டி , வட்டிக்கு வட்டி , என ஊரில் இருக்கும் அனைத்து வட்டி தொழில் இவரிடம் உள்ளது , இன்னும் சொல்லப்போனால் இந்த பகுதியில் உள்ள மாஜி மந்திரியின் பினாமி என்றும் சொல்றாங்க இவர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர்தான் ! பதவி இருக்கிறதுக்காக பட்ட பகலில் நகைக்கடையில் புகுந்து கலாட்டா செய்து இருக்க கூடாது.

இந்தச் சம்பவம் குறித்து  காரிமங்கலம் காவல் துறையினரிடம் விசாரித்ததில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக முடித்துக்கொண்டனர். பட்ட பகலில் சினிமா பாணியில் நகைக்கடையில் புகுந்து கந்து வட்டி கேட்டு திமுக பெண் நிர்வாகி தகராறில் ஈடுபட்ட சம்பவம் சொர்னக்கா கேரக்டரை மிஞ்சும் அளவுக்கு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கிணட்லடிக்கிறனர் எதிர்க்கட்சினர்.

– மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.