திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களின் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களின் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி – போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதும், இளையோருக்கு போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இன்றைய சமூகப்பணிகளுள் முதன்மையான பணியாக மாறியுள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. இந்தச் சூழலில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் ஒன்று திரண்டு, சர்வதேச போதை ஒழிப்பு தினமான (ஜூன் 26) இன்று, போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருள்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருள்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
உறுதிமொழியேற்ற மாணவர்களுக்கு செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், செயலர் அருள்முனைவர் கு.அமல், முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் உள்ளிட்ட கல்லூரி மேலாண்மையினர் தமது பாராட்டத்தல்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
– ஆதன்