போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் முன்னோடி “மகிழ்ச்சி” திட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் முன்னோடி “மகிழ்ச்சி” திட்டம் ! – மிடுக்கான போலீஸ் பணி பலரது கனவு. கண்ணியமான காவல் பணியில், கண்டவன் பேச்சுக்கும் ஏய்ச்சுக்கும் ஆளாக நேர்வது தவிர்க்க முடியாத சாபக்கேடு. கீழிருந்து மேல் வரை ஒட்டுமொத்த போலீசாருமே, கடுமையான பணிச்சூழல்களுக்கு மத்தியில்தான் பணியாற்றி வருகின்றனர். முக்கியமாக, கடுமையான மன அழுத்தத்தை ஒவ்வொரு போலீசாரும் ஏதோவொரு வகையில் அன்றாடம் எதிர்கொள்ளவே செய்கிறார்கள்.

போலீசாரின் இத்தகைய தனிச்சிறப்பான பணிச்சூழலை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான், “மகிழ்ச்சி” திட்டம்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

தமிழக போலீசாரின் மகிழ்ச்சி திட்டம்
தமிழக போலீசாரின் மகிழ்ச்சி திட்டம்

கடந்த 2022 ஆண்டு சென்னையில் பணிபுரியும் காவலர்களின் மனநல மேம்பாட்டிற்காக 53 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த பட்டது. முன்னுதாரணமான இந்த முயற்சியின் மூலம், சுமார் ஆயிரம் போலீசார் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக, தென் மண்டலத்தில் பணிபுரியும் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், சுமார் 30 இலட்சம் மதிப்பீட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இத்திட்டம் மதுரைக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மத்திய மண்டல காவலர்களுக்கான “ மகிழ்ச்சி திட்டம்” தொடக்க விழா கடந்த ஆகஸ்ட் 2 அன்று திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர்/படைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

முன்னதாக, மனநல ஆலோசனை குறித்தான கையேடு வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காவலர்கள் மனநல ஆலோசனை மையம் மூலமாக மீண்டு வந்தது குறித்து ஒவ்வொருவராக எடுத்துரைத்து காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் M. கிருஷ்ணன், காவல்துறை தலைவர், (நலன்) நஜ்முல் ஹோடா, இ.கா.ப., மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, இ.கா.ப., காவல்துறை துணைத்தலைவர், தஞ்சாவூர் சரகம் ஜியாவுல் ஹக், இ.கா.ப., தமிழ்நாடு “மகிழ்ச்சி” திட்ட மாநில ஒருங்கிணைப்பாளரும் மனநல நிபுணருமான டாக்டர் ராமசுப்பிரமணியன், மத்திய பல்கலைக்கழக பேராசிரியரும், மகிழ்ச்சி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் V. வித்யா, மத்திய பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர்ஸ R. திருமுருகன் மற்றும் சென்னை “மகிழ்ச்சி” திட்ட மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் T. பிரபாகர் ஆகியோர் “மகிழ்ச்சி திட்டம்” குறித்து எடுத்துரைத்து பேசினர்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“மகிழ்ச்சி” திட்டம் !
“மகிழ்ச்சி” திட்டம் !

தொடக்க விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் M. கிருஷ்ணன், “நலம் விதைப்போம்” என்ற சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி, மொழிப் பயிற்சி, சுகாதாரம் மற்றும் குடும்ப சமூகத்திற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும்.

மத்திய மண்டலத்தில் உள்ள காவலர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்க 24X7 Helpline எண் வழங்கப்படும்.

இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் பேசுகையில், சென்னையில் காவலர் “மகிழ்ச்சி திட்டம்” துவங்கியபோது, 1000 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, 600 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழக போலீசாரின் மகிழ்ச்சி திட்டம்
தமிழக போலீசாரின் மகிழ்ச்சி திட்டம்

இதில் 100 நபர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இந்த திட்டத்தின்கீழ், மனநல ஆலோசனைக்கு அவர்களாகவே முன்வந்து கலந்துகொள்ள ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் ஏராளமான காவல்துறையினர் பயன்பெற்றுள்ளனர் என்பது, சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற “மகிழ்ச்சி” திட்டத்தின் மூலம் கண்கூடாக தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற திட்டங்களின் மூலம் ஒரு சிலர் பயன்பெற்றாலே ஈடில்லா மகிழ்ச்சி கிடைக்கிறது. மன அழுத்தம் என்பது தன்னை மட்டுமின்றி, தனது குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதால் இதுபோன்ற திட்டங்கள் மூலம் மன அழுத்தத்தில் உள்ள காவல்துறையினருக்கு நிரந்தர தீர்வு பெற முயற்சி எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

இந்த “மகிழ்ச்சி திட்டம்” சுமார் ஒரு வருட காலத்திற்கு நடைபெறும். இதில் மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல் துறையினர் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையினரும் கலந்து கொண்டு பயன்பெறுவார்கள்.

அங்குசம் செய்தி பிரிவு.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.