வட்டிக்கு பணம் வாங்கிய கொடுமைக்கு சொத்தையும் அபகரித்த கும்பல் !
தேனியில், பதினைந்துக்கும் மேற்பட்ட அப்பாவி ஏழை எளிய மக்களிடம் வட்டிக்கு பணம் கொடுத்து சொத்துக்களை பத்திர பதிவு செய்து மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட்டிக்கு வாங்கிய பணம் மற்றும் வட்டியை செலுத்திய பின்னரும் சொத்துக்களை மீட்க முடியாமல் தவிக்கும் அப்பாவி பொதுமக்களின் சொத்துக்களை அபகரித்த நான்கு பேரிடம் தேவாரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை, மீனாட்சிபுரம் பண்ணைப்புரம், தேவாரம், ஓபுலபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏழை எளிய அப்பாவி மக்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கினர்.
வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் அசல் மற்றும் வட்டி பணம் செலுத்திய பின்னரும் அவர்களுடைய சொத்துகளின் பத்திரப்பதிவை ரத்து செய்து கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர்.
வட்டிக்கு பணம் கொடுத்து மோசடி செய்த பால்தாய், சுருளி, ரங்கராஜ் கௌசல்யா, விமலாதேவி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதலமைச்சர், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது.
வட்டிக்கு பணம் வாங்கிய கொடுமைக்கு, சொத்துக்களையும் நகைகளையும் இழந்து மீட்க முடியாமல் அப்பாவி ஏழை எளிய மக்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து புகார் அளித்த பொதுமக்களிடம் கோம்பை காவல் சார்பு ஆய்வாளர், நீதிமன்றத்தில் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னதாகவும் இதனால் என்ன செய்வது என்று தவித்து வருவதாகவும் ஊடகங்களின் வழியே செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து இன்று தேவாரம் காவல் நிலைய ஆய்வாளர் சொத்துக்களை இழந்த அப்பாவி பொதுமக்களிடம் விசாரணை நடத்தி விரைவில் உங்களுடைய சொத்துக்கள் மீட்டுத் தரப்படும் என அப்பாவி பொதுமக்களிடம் காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
— ஜெய்சிறீராம்.