சமூகப் பணியில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களின் தலைமை பண்பு மற்றும் சமூக மேம்பாட்டு வழி காட்டுதல் கருத்தரங்கு
திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் 2.0 திட்டத்தின் கீழ் கல்வி மற்றும் சமூகப்பணியில் 40வது ஆண்டை நோக்கி செல்லும் வேளையில் 96 கிராமங்களில் , 22 நகர குடிசை வாழ் பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் குழு தலைவர்களுக்கு அவர்களின் தலைமை பண்புகளை வளர்க்கவும் மேலும் சமூகத்தின் தேவைகளை அறிந்து தங்களின் சேவை வழியாக கற்றலை வளர்த்துக்கொண்டு சமூக மேம்பாட்டில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள இக்கருத்தரங்கம் கல்லூரியின் சமூதாய மன்றத்தில் நடைபெற்றது.
விரிவாக்கத் துறையின் இயக்குனர் சகாயராஜ் சே.ச தமது தொடக்க உரையில் மாணவர்கள் விரிவாக்கத் துறையின் வழியாக அவர்களுடைய தலைமை பண்புகளை யும், முடிவு எடுக்கும் திறன்களையும், சமுதாய சூழலையும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை விரிவாக்கத்துறை வழங்குகிறது என்று கூறினார்.
கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மரியதாஸ் சே.ச மாணாக்கர்களின் சமூகப்பணியின் செயல்பாடுகளை விளக்கும் கண்காட்சியினை திறந்து வைத்து தனது தலைமையுரையில் அனுபவங்களின் தாக்கத்தினை படிப்பினையாக கொண்டு மக்களின் சமூக மேம்பாட்டிற்கு பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார் இணை முதல்வர் முனைவர் ராஜேந்திரன் பாகுபாடு நிறைந்த சமூகத்தில் அனைவரும் சமம் என்றும் அனைவருக்குமான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்.
அறிவுறித்தினார் சமூக ஆர்வலரும் கிரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகி ஜான் பீட்டர் தனது சிறப்புரையில் சமூகப்பணியில் ஈடுபடும் மாணவர்கள் சமூகத்தில் காணப்படும் ஏற்ற தாழ்வுகளை நன்கு அறிந்து ஏழை எளிய மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் மக்கள் வாழ்வு மேம்பட சமூகப்பணியில் முழுமையாக அர்பணித்து ஈடுபடவேண்டும் என கூறினார்.
உழைக்கும் மக்களின் கல்வி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலர் சந்திர சேகர் மக்களோடு பயணிக்க வேண்டும் அவர்களின் வாழ்வியலை தெரிந்து கொண்டு சமூக மேம்பாட்டிற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் மாணவர்கள் தங்களின் சமூக அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். துணை முதல்வர் அருள் முனைவர் கில்பர்ட் கமிலஸ் வாழ்த்துரையில் கிராம மக்களின் வாழ்வு மேம்பட மாணவர்கள் தங்களை அர்பணித்து சமூகப்பணியில் ஈடுபடவேண்டும் என கூறினார்.
விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயசீலன் மாணவர்கள் சமூகப்பணியில் ஈடுபட வழிமுறைகளையும் செயல்பாடுகளையும் பற்றி விளக்கினார்கள்.
செப்பர்டின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார் வரவேற்றார்; ஒருங்கிணைப்பாளர்கள் கிறிஸது ராஜா மற்றும் யசோதை நன்றி கூறினார்கள் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் 550 மேற்பட்ட மாணவ குழு தலைவர்கள் கலந்து கொண்டு தங்களுடை சமூக மேம்பாட்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள் மேலும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணாக்கர்களின் செயல்களை பாராட்டினார்கள்
கண்காட்சியில் 200 க்கும் மேம்பட்ட மாணவர்களின் சமூகப்பணி செயல்பாட்டு விளக்க புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.